இப்படியும் பேசிக்கிறாங்களே….. இதெல்லாம் உண்மைதானுங்களா?

முல்லைப் பெரியாறு பிரச்னையில தென் தமிழ்நாடே தீப்பிடிச்சு எரிஞ்சுக்கிட்டிருக்கு. ஒட்டுமொத்தத் தமிழர்களும் உணர்ச்சிப் பிழம்பாக் கொந்தளிக்கிறாங்க.

ஆனா…. நம்முடைய சினிமாக் கூத்தாட்டக்காரங்க சைடுல இருந்து மட்டும் ஒரு சத்தத்தையும் காணோமே.

மலையாளத் திரையுலகமே ஒட்டுமொத்தமா இந்த விவகாரத்தில கேரளாவுக்கு சப்போர்ட்டா இருக்கறப்போ….. இங்க மட்டும் ஏன் இந்த மௌனம்?

நம்ம முன்னணி நடிகர்கள் எல்லாமே கேரள நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவரா, மாடலா, கைத்தடிகளா இருக்கிறதனால….

இந்த நேரத்துல தமிழு, தண்ணின்னு ஏதாவது உணர்ச்சி வசப்பட்டுப் பேசி…. வருமானத்தில மண்ணை அள்ளிப் போட்டுக்கக் கூடாதுன்னுதான்… வாயைப் பொத்திக்கிட்டு இருக்காங்களாம்.

அன்னா ஹசாரே உன்ணாவிரத்ததுக்கு டெல்லி வரைக்கும் போய் கலந்துக்கிட்டு வந்த நடிகர் விஜய், அணைப் போராட்டத்துக்கும் ஆதரவு தருகிறேன்னு தேனி வரைக்கும் ஒரு நடை போயிட்டு வந்திருக்கலாமே….. போக மனசில்லையா? அல்லது தேனி போறதுக்கு பஸ்ல டிக்கெட் கிடைக்கலையா?

ஆனாலும், அதுவல்ல மெயின் காரணம்….. நம்ம ஊரு நடிகர்களில் பெரும்பாலானவர்கள், மலையாள நடிகைகளின் ஆழமான நட்புக்குள் அமிழ்ந்து கிடப்பதால்தான்….. மூடிக்கிட்டுக் கிடக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி உலவுகிறதே….

இதெல்லாம் உண்மைதானுங்களா?….

ஸ்பெக்ட்ரம்…..

இந்த ஒரு வார்த்தைதான் எத்தனை பேருடைய வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது?

இதில் உச்சகட்டம் நீரா ராடியா!

அரசு இயந்திரத்தையே தனது சுட்டுவிரலால் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த அந்தப் புரோக்கர்….

இந்தப் புரோக்கர்களால், இருக்கிற தொழிலையும் விட்டுவிட்டு இன்றைக்கு நிர்க்கதியாக நிற்பதாலும்…..

இனிமேலும் அவருடைய தயவு தேவை என்பதாலும்….

நீரா ராடியாவுக்கு, தி.மு.க. சார்பில் ‘டில்லி மேலிடப் பிரதிநிதி’ என்ற போஸ்ட்டும், ‘அகில இந்திய தி.மு.க. மகளிர் அணித்தலைவி’ என்கிற பொறுப்பும் தர உத்தேசித்திருப்பதாகப் பேசிக்கொள்கிறார்களே…

இதெல்லாம் உண்மைதானுங்களா?….

முல்லைப் பெரியாறு அணை பலவீனமா இருக்குது….. பெரிசா நில நடுக்கம் வந்திடுச்சின்னா அணை உடைஞ்சிடும்.

அணை உடஞ்சிடுச்சின்னா….. கேரளாவே கிழிஞ்சு போயிடும்.

அதனால, இருக்கிற அணையை இடிச்சிட்டுப் புது அணை கட்டறதைத் தவிர வேற வழியில்லைன்னு…..

கேரள முதல்வர் உம்மன் சாண்டி சொல்லியிருக்காரு.

அவரோட அரசும் கூடப் பலவீனமாத்தானே இருக்குது?

எதிரணியை விட ரெண்டு சீட்டோ அல்லது மூணு சீட்டோதான் அதிகமா இருக்குது.

இதை வச்சுக்கிட்டுத்தான் அவரும் ஆட்சியை ஓட்டிக்கிட்டு இருக்காரு.

ஏதாச்சும் ஆசையில, ரெண்டு எம்.எல்.ஏ. இடம் மாறித் தாவிட்டாங்கன்னா….

அம்புட்டுதான்…. ஆட்சி அம்பேல் ஆயிடும்.

அதனால….. இருக்கிற அணையை இடிச்சிட்டுப் புது அணை கட்ட முயற்சிக்கிற மாதிரி…..

இருக்கிற ஆட்சியை கலைச்சிட்டுப் புது ஆட்சி அமைக்க முயற்சிக்கப் போறீங்கன்னு பேசிக்கிறாங்களே….

இதெல்லாம் உண்மைதானுங்களா உம்மன் சாண்டி?….

அந்தக் காலத்தில அந்தப்புரங்களில் ராணிகள், இளவரசிகள் ஆகியோருக்குக் காவலர்களாகவும், உதவியாளர்களாகவும் திருநங்கைகளைத்தான் வைத்திருப்பார்களாம்.

காரணம் என்னன்னா….. அவங்க எஜமான விசுவாசம் மிகுந்தவர்களாக இருப்பாங்களாம். எஜமானருக்காக உயிரையே கூடக் கொடுப்பாங்களாம்.

ரகசியங்கள் எதையும்….. எந்தச் சூழ்நிலையிலேயும், எதற்காகவும் ஆசைப்பட்டோ அடிமைப்பட்டோ வெளியே சொல்லிவிட மாட்டார்களாம். நம்பிக்கையின் இன்னொரு பக்கமாக அவர்கள் இருந்தார்களாம்.

அதனாலதான், இப்ப அந்த ராஜாக்கள் காலத்து அந்தப்புரப் பழக்கம் கோலிவுட்டிலும் ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பாலிவுட்டிலும் கூடப் பல நடிகைகள் தங்களோட உதவியாளர்களா திருநங்கைகளையே நியமிச்சிருக்காங்களாம்.

அப்படி என்னதான் பரம ரகசியத்தை அந்த நடிகைகள் எல்லாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று விசாரித்தால்…..

தினம் ஒரு வீட்டில் தீபாவளி என்கிறார்களே….

இதெல்லாம் உண்மைதானுங்களா திரையுலக நட்சத்திரங்களே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s