கிரிக்கெட் பந்து + கிட்னிக் கவசம் = பொதுக்குழு போட்டோ!

இது அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ஒரிஜனல் போட்டோ….

சித்து வேலைகளோ அல்லது ஒட்டு வேலைகளோ எதுவும் செய்யப்படாத போட்டோ.

இப்போது மேலே உள்ள அந்த போட்டோவைக் கவனித்துப் பாருங்கள்…..

யாராவது ஒருவராவது சந்தோஷமாக, முகத்தில் புன்னகை மலர உட்கார்ந்து இருக்கிறார்களா?

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறமாதிரி இருக்கிறார்களா இல்லையா?

வேகமாக வீசப்பட்ட கிரிக்கெட் பந்து, படாத இடத்தில பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பாதுகாப்பாகக் கைகளால் பொத்திக் கொள்கிறமாதிரி…..

எல்லா அமைச்சர்களுமே ஒரே இடத்துல, ஒரே மாதிரி கையை வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்.

அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கனும்னு சொல்லிவிட்டு, இப்படி ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தா எப்படி?

இதோடு சேர்ந்து….. இடுப்பு ஒடிய விழுந்து வணங்குகிற கலாச்சாரம் எப்போதுதான் மாறும்?

புனிதமாகப் போற்றப்பட்ட ஒரு உறவு புளித்துப் போய், போயஸ் கார்டனை விட்டே வெளியே போய்விட்டது.

அவர்களுடன் தொடர்பு கொண்டால் எப்போதும் மன்னிப்பே கிடையாது என்கிற அறிவிப்பு வேறு.

28 வருசமா நீங்க தொடர்பு வெச்சிருந்தீங்களே…. அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கறது?

சசிகலா ஆகாது, ஆனால் இளவரசி மட்டும் வேண்டும் என்பது என்ன கதை?

ஜெயா டி.வி. நிர்வாகமும், கொடநாடு எஸ்டேட்டும் அவங்ககிட்டதானே இருந்தது, இருக்குது…. அது என்னாச்சு?

சசிக்குத் துணை போகாதீர்கள் என்று சொல்வதற்குக் கோடரிக் கதையைச் சொல்லி இருக்கிறீர்களே…..

கோடரி மரத்தை வெட்டும்போது….. உங்களிடமிருந்துதானே கோடரிக்குக் கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன என்று ஒருவன் கேட்டானாம்.

தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். புரிந்தால் சரி.

இனி எல்லாமே நீங்கள்தான் என்கிற நிலையில்….. உங்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும், விமர்சனத்துக்கு உள்ளாகும் என்கிற அச்ச உணர்வோடு, உங்களது விழியசைவும், விரலசைவும் இருக்கவேண்டும்.

நீங்கள் சென்னை மேயர் வேட்பாளராக சைதை.துரைசாமியை அறிவித்தவுடன்….. எவ்வளவு ஆதரவுக் குரல் எழுந்தது?

ஆனால், ஒவ்வொரு முறை மந்திரி சபையை மாற்றும் போதும்…..எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தது?

எல்லாவற்றிலுமே முதல்வராக இருக்க, இனிமேலாவது முயற்சி செய்யுங்கள்!

Advertisements

One comment on “கிரிக்கெட் பந்து + கிட்னிக் கவசம் = பொதுக்குழு போட்டோ!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s