அச்சத்தில் உறைந்து போயுள்ள அடிமைகளின் கூடாரத்தில்- மண்புழுக்களின் மாநாடு?

அச்சத்தில் உறைந்து போயுள்ள அடிமைகளின் கூடாரத்தில், மண்புழுக்களின் மாநாடு என்றதும்……

“தானே” புயலின் பாதிப்பு குறித்த அச்சத்தில் இருந்த தமிழக மக்களை விட, அதிகம் நடுங்கிப் போனவர்கள் அமைச்சர் பெருமக்களும், நிர்வாகிகளும்தான்.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தவர்களுக்குக் கல்தா கொடுக்கப்படும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு அது.

சசிகலாவுக்கு நாங்களாகவா ஆதரவளித்தோம்? உங்களின் உயிர்த்தோழி, உடன்பிறவா சகோதரி என்றெல்லாம் உலகுக்கு அறிவிக்கப் பட்டதால்தானே…. நாங்களும் அடிபணிந்து போக நேர்ந்தது?

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது கூடத் தெரியாத அளவுக்குக் கட்டுண்டு கிடந்தது உங்கள் குற்றமா? எங்கள் குற்றமா?

மகாமகக் குளத்தில் ஒன்றாக நீராடி மகிழ்ந்ததிலிருந்து…… தத்தெடுத்த மகன் திருமணம் வரை….. எத்தனை இம்சைகளை நாங்கள் எங்களுக்குள்ளேயே மென்று விழுங்கியிருக்கிறோம்?

பிரிக்க முடியாத அளவுக்கு அப்படியென்ன பெரிய உறவு? என்றெல்லாம் தி.மு.க. மேடையில் கேவலமாகக் கிண்டலடித்த போது கூட…… நாங்கள் சகித்துக்கொண்டு இருக்கவில்லையா?

உங்களுக்குள் திடீரென ஏதோ ஊடல் என்றவுடன், எங்களைப் பந்தாடுவதில் என்ன நியாயமிருக்கிறது?…..

இப்படியெல்லாம் கேள்விகளைப் பொதுக்குழுவில் கேட்க முடியாது என்றாலும், பக்கத்தில் இருப்பவரிடத்திலாவது பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா? (அந்தத் தைரியம் கூட அங்கு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை)

இந்தப் பொதுக்குழுவில்…..

வெளியே சசிகலாவை அனுப்பியது ஏன் என்று ஜெயலலிதா விளக்கமளித்திருக்க வேண்டும்.

இன்னும் கூட நிறையப் பேருடைய மனதில் இது ஒரு நாடகம் என்ற எண்ணம்தான் உள்ளது. அந்த அச்சத்தை அவர் போக்கியிருக்க வேண்டும்.

சசிகலாவை இவ்வளவு தூரம் வளர விட்டதுக்குக் கட்சித் தலைவர் என்ற முறையில் கட்டாயம் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்தக் கும்பலினால் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, தகுந்த நிவாரணங்கள் கிடைக்குமா என்று அறிவித்திருக்க வேண்டும்.

அரசுத் துறைகளில் இவர்களின் அதிகபட்ச அத்து மீறல்களினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் என்ன தீர்வு? என்று….. பொதுமக்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படி ஆயிரக்கணக்கான கேள்விகள் விடையில்லாமல் கிடக்கிறது. இவை அனைத்திற்கும் முழுமையான பதிலை அளிக்க வேண்டியவர் ஜெயலலிதா.ஒருவர் மட்டுமே.

ஆனால்…. நடந்தது என்ன?

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் தொண்டர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிற எச்சரிக்கை…..

அடுத்த பிரமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அ.தி.மு.க. உருவெடுக்க வேண்டும் என்கிற ஆசை…….

தொண்டர்களிடம் பதவியில் இருப்பவர்கள் தோழமையுடன் பழக வேண்டும் என்கிற வேண்டுகோள்……

வாய்க்கு ருசியாக வகை வகையான விருந்து……

இவைகளோடு மட்டும்….. பொதுக்குழுப் புயல் எந்தவிதச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக் கடந்துவிட்டது.

நாடகம், இது வெறும் நாடகம், உச்ச காட்சி நடக்குதம்மா….. என்கிற பாட்டுச் சப்தம்தான் காதில் ஒலிக்கிறது!

Advertisements

3 comments on “அச்சத்தில் உறைந்து போயுள்ள அடிமைகளின் கூடாரத்தில்- மண்புழுக்களின் மாநாடு?

  1. பொதுக்குழுப் புயல் எந்தவிதச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக் கடந்துவிட்டது….

    நல்ல கமெண்ட்!

  2. பிரதமர் தேர்ந்து எடுப்பது எல்லாம் அப்பவே அவருக்கு ஆசை இருக்கு. ஆனால் இப்போ இருக்குற நிலைமையே வேற. எதிர்ப்பு அலை ஆறு மாதத்தில் எந்த கட்சிக்கும் இந்த மாதிரி இருந்ததாக தெரியாது. அதனால் அடக்கி வாசிப்பதே மேல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s