சோகமான முடிவு … அனைவருக்கும் ஒரு பாடம்!

 

“மொட்டை மாடி….5 மாணவர்கள்…. 2 மாணவிகள்” என்கிற தலைப்பில், கடந்த 25-ஆம் தேதி ஒரு எச்சரிக்கையைப் பதிவு செய்திருந்தேன்.

அந்தப் பதிவின் தொடர்ச்சியாக….. இரண்டாவது பதிவு ஒன்றை இவ்வளவு சீக்கிரத்தில் போட வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

செய்தியைக் கேள்விப்பட்டதும் எனக்கே கொஞ்ச நேரம் கிறுகிறுத்துப் போனது என்றால்….

பாவம், அந்தப் பெண்ணைப் பெற்றவர்களின் மனது என்னமாய்த் துடி துடித்திருக்கும்?

பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வந்து மொட்டை மாடியில் வைத்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்து, அந்தக் காட்சியை செல்போன் மூலம் பரப்பியதால், பிளஸ் 2 மாணவர்கள் 5 பேருக்கும் 11ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் டி.சி கொடுக்கப்பட்டது.

டி.சி கொடுக்கப்பட்ட செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவி, மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது, மின் விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்களையும் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை முடிந்தபிறகு உடலைக் கிராமத்துக்கு கொண்டு சென்றபோது….. மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மாதர்பாக்கத்தில் இருந்து செதில்பாக்கம் செல்லும் கூட்டுச் சாலையில் உடலை வைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.

மாணவியின் சாவுக்குக் காரணமான மாணவர்கள் 5 பேரையும் கைது செய்ய வேண்டும், பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.

 

இந்தச் சோகமான சம்பவம் நமக்கு உணர்த்துகிற பாடம்…..

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் அவசியமா என்பதை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது,

செல்போனில் தவறான படங்களைப் பார்த்து. யு.கே.ஜி. மாணவியை 9ஆம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்துள்ள கொடுமை பங்களுரில் நடந்துள்ளது.

இந்த செல்போன் மாணவ சமுதாயத்துக்கு ஒரு பெரும் சாபக்கேடு என்பதை மாணவ, மாணவிகள் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்கள் எல்லோரும் கூடப்பிறந்த பிறப்புக்கள். இப்படிச் செய்யலாமா? அநியாயமாக ஒரு உயிர் பிரிந்து விட்டது.

சோகமான முடிவு … அனைவருக்கும் ஒரு பாடம்.

அரசாங்கம் உடனடியாகச் செய்யவேண்டியது….. மீண்டும் ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் ஒழுக்க நெறிப்படுத்துகிற உரிமையை வழங்கிட வேண்டும்.

இது- அவசரம். அவசியம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s