மகா ராணியும்…… மருத்துவர் ராணியும்!

அம்மாவின் அடுத்த ரவுண்ட் ஃபுட்பால் மேட்ச் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது…..

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்கிற மாதிரி……

மகா ராணி ஜெயலலிதாவால் அமைச்சரான பரஞ்ஜோதி, மருத்துவர் ராணியால் அதை இழந்துள்ளார். (பதவியேற்ற ஒரே மாதத்தில் பதவி காலியாகிவிட்டது).

அவருடைய கிரகப் பெயர்ச்சியோடு சேர்ந்து, செல்வி ராமஜெயமும் அவுட் ஆக்கப்பட்டிருக்கிறார்.

இவர்களுக்குப் பதிலாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக திருப்பூர் ஆனந்தனும், சமூகநலத் துறை அமைச்சராக வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை ரவுண்டுவரை இவர்கள் விளையாடுவார்கள் என்பது இறைவனுக்கே தெரியாது.

அம்மா அமைச்சரவையில்….. ஏற்கனவே மூன்று முறை வெளியே தூக்கி வீசுவதும், உள்ளே தூக்கிப் போடுவதும் நடைபெற்றிருக்கிறது. இது தவிர, அவ்வப்போது இலாக்கா மாற்றங்கள் வேறு.

அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு, அறநிலையத் துறை சண்முகநாதனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தில், சண்முகநாதனிடம் பதவி பறிக்கப்பட்டு பரஞ்ஜோதி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல ஆட்சி அமைந்த போது, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டார். இவரது பதவி ஒரு மாதத்தில் பறிக்கப்பட்டது. இதன் பின் செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் வசம் சட்டம், நீதி, சிறைத் துறை ஒப்படைக்கப்பட்டது. எனினும், கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, செந்தமிழனிடம் இருந்தும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இதன்பின், ராஜேந்திர பாலாஜி செய்தித் துறை அமைச்சராகவும், சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை புதிதாக பதவியேற்ற பரஞ்ஜோதியிடமும் வழங்கப்பட்டது. ஆறு மாதங்களில், சட்டத் துறையை கவனித்து வந்த மூன்றாவது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இப்போது- சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை, பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையை கவனிக்கும் நான்காவது அமைச்சராக இவர் இருக்கிறார். (சட்டத்துறைக்கு மட்டும் மாதம் ஒரு அமைச்சரோ?)

நம்ம ஊருல இருக்குற சட்டத்துக்கு எல்லாம் ஒரு அமைச்சர் தேவைதானா? என்று கூட அம்மா நினைத்திருக்கலாம். இந்த விடுதலைக்கு அப்புறம் 65 ஆண்டுகால வரலாற்றில், இந்த சட்ட அமைச்சர்கள் இதுவரை என்னத்தைப் பெரிசாச் சாதிச்சிக் கிழிச்சிருக்கிறாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க….

அம்மாவோட அமைச்சரவையில, அம்பேத்காரே சட்டஅமைச்சரா இருந்தாலும், அவரும் ரெண்டு நாளுக்கு மேல தாங்க மாட்டாரு….. ரொம்பத் தம் கட்டி இருந்தாக் கூட அதிகபட்சம் ஒரு வருஷம்தான் தாங்குவாரு….. அப்படி இருக்கிறப்போ இவங்க எல்லாம் எம்மாத்திரம்?

அமைச்சர்களை மாற்றுவதற்கே அம்மாவுக்கு நேரம் போதாது போல் இருக்கிறது. காலையில் ஒரு அமைச்சர்; மாலையில் ஒரு அமைச்சர் என்று மாறிக்கொண்டிருந்தால், எந்த துறையில் வேலை ஒழுங்காக நடக்கும்?

ஏற்கனவே…. அமைச்சர்கள் வாய்மூடி மௌனிகளாய், தலையாட்டி பொம்மைகளாய், இடுப்பை வளைத்துக்கொண்டு இருக்கின்றனர். எதைப் பேசினால் என்ன வம்பு வருமோ? எதைச் செய்தால் பதவி போய் விடுமோ? என்கிற பயத்திலேயே, ஒன்றும் செய்யாமல் உற்சவ மூர்த்திகளாய் உலா வருகின்றனர்.

இந்த லட்சணத்தில், அடிக்கடி அமைச்சர்களைப் பந்தாடினால் நிர்வாகம் என்ன லட்சணத்தில் நடக்கும்?

அமைச்சர்கள், மக்களுக்குச் சேவை செய்யவேண்டியவர்கள். அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பவர்கள். அவர்களை அடிமைகளைப் போல நடத்துவதும், அடிக்கடி மாற்றுவதும்…… ஆட்சியின் கேவலமான நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, தகுதியற்றவர்களை நியமிக்கும் உங்கள் திறமையின்மையையும் அல்லவா வெட்ட வெளிச்சமாக்குகிறது?

ஒருவேளை, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையுமே அமைச்சராக்கி அழகு பார்ப்பது என்று அம்மா முடிவு செய்து விட்டாரோ என்னவோ?

ஆனால், இரண்டு விஷயங்களில் அம்மா கவனமாக இருக்க வேண்டும்…..

ஒன்று……. இதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவி, துணைவி, இணைவி, கணவர்களை வைத்துள்ள, வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரையும் ராஜினாமா செய்யச் சொன்னால்?….. இடைத்தேர்தலுக்குப் பதில் பொதுத்தேர்தலே நடத்தவேண்டியிருக்கும்…. ஜாக்கிரதை!

இரண்டு….. அமைச்சராக இருப்பதற்கான தகுதி அ.தி.மு.க வில் ஒருவருக்கும் இல்லாத காரணத்தால், ஆறு மாதத்தில் ஆறு முறை அமைச்சரவை மாற்றியதையே ஆதாரமாகக் கொண்டு, ஆட்சியைக் கலைத்து விடலாம் எனப் பரிந்துரை செய்கிறேன்- கவர்னர். ரோசையா.

இரண்டுமே….. ஆபத்தான விஷயங்கள்தான்!

Advertisements

3 comments on “மகா ராணியும்…… மருத்துவர் ராணியும்!

  1. As per constitution, a crime or offense must be punished only once and that punishment would obviously be executed only once. In India, more particularly Tamil Nadu, being a Citizen of the state is a repetitive crime where one is repeatedly punished every 5 years at least (unless any mid-term poll occurs) and whoever comes on to the power takes the discretionary power and liberty and prerogative to continually punish and convict people, but for any actual offense (civil or criminal as such!!). Vaazhga TamilNadu !! Valarga TN and India !! Jai Hind !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s