பாம்புகளை விட்டுப் பயமுறுத்தினால் மட்டும்?….

அன்னா ஹசாரே மட்டும் அல்ல, ஆயிரம் கடவுள்களே ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும்……

இந்திய மன்ணிலிருந்து அழிக்கமுடியாத ஒரு சக்தி இருக்கிறதென்றால்- அது லஞ்சமும் ஊழலும்தான்.

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் ஆரம்பித்து, ஆடி அடங்கிய உடல் தகனம் வரை…. அது இல்லாத இடமே இல்லை.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தேசியத் தொழிலாக அங்கீகரிக்கப் பட்டுவிட்டது லஞ்சமும் ஊழலும்.

அரசியல்வாதிகள் பழக்கிவிட்டார்கள்…. அப்பாவி மக்கள் பழகிக்கொண்டார்கள்….

எப்படித்தான் இதிலிருந்து மீள்வது?……

இதோ….. அப்படி நடந்த ஒரு கூத்தைப் பாருங்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹக்குள் என்பவர். இயற்கை வளப் பாதுகாப்பாளர்.

இவருக்குப் பாம்புகளின் மீது அலாதிப் பிரியம். பாம்பு பிடிப்பதைப் பகுதி நேரத் தொழிலாகவே செய்து வந்தார்.

தான் பிடித்து வைத்திருக்கும் வகை வகையான பாம்புகளை வளர்ப்பதற்கு வசதியாக, தேவையான அளவு நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசுக்கு மனுச்செய்தார்

அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, அவருக்கு நிலத்தை ஒதுக்கித் தந்தது. அதற்கான உத்தரவைத் தரும்படி மாவட்ட அதிகாரிகளை ஹக்குள் அணுகினார். கடவுளே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?

அதிகாரிகளோ, இவரிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து, இதோ அதோ என இழுத்தடித்தனர். .இறுதியில்- வழக்கம்போலக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான், நிலத்திற்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறிவிட்டனர்.

இதனால் ஹக்குள் எரிச்சலடைந்தார். உள்ளூர்ப் பத்திரிகையாளர்களிடம் நடந்த விவரத்தைச் சொல்லி புலம்பினார்.

அதற்கு அவர்கள் சொன்ன ஐடியா என்ன தெரியுமா? “பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவரான நீங்கள், ஏன் அந்தப் பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்குப் பாடம் புகட்டக்கூடாது?’ என யோசனை கூறினர்.

அவர்களின் யோசனையை ஏற்ற ஹக்குள், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாம்புகளைச் சாக்குப்பைக்குள் போட்டு எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார்.

அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்…. அவைகளை எடுத்து வெளியில் விட்டார்.

பாம்புகள் சீறிப் பாய்ந்து வந்து படமெடுத்து ஆடியதைப் பார்த்த அரசு அதிகாரிகள், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். அத்துடன் போலீசிலும் புகார் செய்தனர்.

பிறகு என்ன? ஒரு வழக்கு, ஒரு பட்டா…. இரண்டும் கிடைத்தது.

ஐடியா நல்லாத்தான் இருக்கு!

Advertisements

2 comments on “பாம்புகளை விட்டுப் பயமுறுத்தினால் மட்டும்?….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s