மொட்டை போட்டது வீண் போகலை…!

கடும் வெயிலும் கடும் குளிரும் கலந்த 192 நாட்கள் திகார் சிறைவாசம்…..

எதிர்பார்த்து வருகிற போதெல்லாம் ஏமாற்றம் தருவதாய் அமைந்துபோன 4 ஜாமீன் மறுப்பு தினங்கள்….

ஒற்றை அறை, தனிமையின் கொடுமை, தாங்கமுடியாத பிரிவின் தாக்கம், எல்லாம் இருந்தும் எல்லாம் இழந்த நிலை….

அனைத்து வலிகளும் ஒற்றை வரி ஆணையில் அகற்றப்பட்டு விட்டன.

ஆம்…. கனிமொழி வெளியே வர விசா கிடைத்துவிட்டதாக ஐகோர்ட்டு அறிவித்துவிட்டது.

ஸ்பெக்ட்ரத்தில் சம்பந்தப்பட்ட யாருக்குமே கடந்த 7 மாதங்களாக ஜாமின் கிடைக்காமல்தான் இருந்து வந்தது.

குறிப்பாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்கிற சுப்ரீம்கோர்ட்டின் கருத்துப்படி கூட கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படைச் சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்

இதையெல்லாம் தாண்டி, ஒருவேளை…..

கனிமொழியின் ஜாமீனுக்காக மொட்டை போட்ட தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் ஆசையை, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் வந்துதான் நிறைவேற்றி வைத்துவிட்டாரோ?

ஒருக்கால், வசந்தி ஸ்டான்லி முடியைக் கொடுத்ததற்குப் பதிலாகத் தனது விரலை வெட்டிக் காணிக்கையாகப் போட்டிருந்தால், வழக்கிலிருந்து விடுதலையே கூடக் கிடைத்திருக்குமோ என்னவோ?

விசாரணை முடிவின்போது செய்வார் என்று நம்புவோமாக. கனிமீது அவருக்கு இருக்கிற அதே அளவு அக்கறை நமக்கு மட்டும் இல்லையா என்ன?

இந்த நேரத்தில்….. கனிமொழி எழுதிய “கரங்களில் விலங்குகள்” என்கிற கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

மூடிய விழிகளைத் தாண்டி துளைக்கின்றது குத்திட்ட பார்வை
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
புன்னகை.

சொல்லொணாப்
பதற்றங்கள் நிறைக்கின்றன என்னை.
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு.

குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு
எப்படித் திரும்புவேன்.

இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு நடந்த
சாலைகளை.

ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.

இனிமேலாவது, கனிமொழி கனிமொழியாக இருக்கவேண்டும் என்பதே நம்முடைய ஆசையெல்லாம்!

Advertisements

7 comments on “மொட்டை போட்டது வீண் போகலை…!

 1. காரணம் இங்கு கனியவில்லை என்பதை விட
  மொழியை வெறுக்கும் கூட்டத்துக்கு
  கனிமொழி காரணமாய் போனார் என்பதே உண்மை.
  சட்டம் தன் கடமையை செய்ததா ,என்றால் ஆமாம்
  தமிழர்கள் மீது மட்டும் என்று சொல்லலாம்…
  கொலை செய்தவன் .கொலைக்கு காரணமான
  கயவர்கள் எல்லாம் வெளியே இன்னும் …
  சட்டம் இடம் பார்த்து கடமை …

 2. ஸ்டாலின், நிதின் கட்காரியை சந்தித்ததால் தான் ஜாமீன் கிடைத்ததாக வெங்காயம் அப்படின்றவர் சொல்லியிருக்கார்… அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க

 3. 1. தட்டிக் கொடுத்திருக்கும் பாபு சார் அவர்களுக்கு நன்றி!

  2. வழக்கம்போல சூர்யஜீவாவின் சந்தேகம்…. ஸ்டாலின், நிதின் கட்காரியை சந்தித்ததால் தான் ஜாமீன் கிடைத்ததாக வெங்காயம் அப்படின்றவர் சொல்லியிருக்கார்… அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

  கனி கதையைப் பேச ஆரம்பித்தால்… எத்தனை கதைகள் இப்படி வெளியே வ்ருமோ தெரியவில்லை.

 4. சூர்யஜீவா சார்… அதுதான் பதிலையும் நீங்களே சொல்லிட்டீங்களே…. “ரூம் போட்டு யோசிப்பீங்களோ?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s