ஒரு ரப்பர் ஸ்டாம்பின் அடுத்த பயணம்!

பரந்து விரிந்து கிடக்கும் நமது பாரத தேசத்தின் முதல் குடிமகள்…..

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எட்டு நாட்கள் சுற்றுப்பயணமாகப் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

சமீபத்தில்தான் தென்கொரியாவுக்கு ஜாலியாக ஒரு டூர் போய்விட்டு வந்தார். அந்தக் களைப்புத் தீர்ந்தவுடன், மீண்டும் அடுத்தக்கட்டப் பயணத்தை துவங்கியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் எட்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

எதற்காக இந்தச் சுற்றுப்பயணம் தெரியுமா? நீங்கள் நினைக்கிறமாதிரி உல்லாசச் சுற்றுலா அல்ல இது.

அந்த இரு நாட்டு வங்கிகளிலும் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த சர்ச்சைதானே, இப்போது இந்திய அரசியலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்தத் தீயில் கொஞ்சமாவது தண்ணீர் ஊற்ற வேண்டாமா? அதற்காக என்று சொல்லித்தான் இந்தப் பயணம்.

அப்படி இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய தகவல்களை, இந்தியாவிடம் அளிக்கக் கோருவது குறித்து நடக்க இருக்கும் இருதரப்புப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதும் இந்தப் பயணத்தின் ஒரு அம்சம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நம்பும்படி இருந்தால், நம்புபவர்கள் நம்பிக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்.

எதிர்வரும் 4ம் தேதி வரை சுவிட்சர்லாந்திலும், பின்னர்4ம் தேதி இரவு முதல் 7ம் தேதி வரை ஆஸ்திரியாவிலும் இருப்பார் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பார்க்கலாம், பாட்டீல் என்னதான் செய்துவிட்டு வருகிறார் என்று!

அவர் திரும்பி வந்த பிறகுதான், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம் என்று இருக்கிறேன்.

“இதுவரை தாங்கள் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய விபரம்? உடன் வந்தவர்கள் யார் யார்? என்னென்ன காரணங்களுக்காக மேற்படி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன? அவைகளுக்கென இதுவரை ஆன செலவு விபரம்?”– போன்ற விபரங்களை எல்லாம் கேட்டு, பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் முடிவிலிருக்கிறேன்.

வெட்டிச் செலவு வைக்கும் இந்த ஜனாதிபதி பதவியும், கவர்னர் பதவியும் இந்த நாட்டில் இன்னும் எதற்கு இருக்கிறது? என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.

சோனியாவை மீறி, மத்திய மந்திரிசபையை மீறி, தானாக எதையுமே செய்யமுடியாது என்கிறபோது…. இந்த ரப்பர் ஸ்டாம்பு பதவி என்ன வெங்காயத்திற்கு இங்கு தேவை? அதுக்கு ஒரு அரண்மணை, கோடிக்கணக்கில் வீண் செலவு…… வெட்டியாக இருந்துகொண்டு அதையெல்லாம் அனுபவிப்பதற்கு வெட்கமாக இருக்காதா?

அப்படித்தானே கவர்னர் பதவியும்? ஊனமுற்றோருக்கென்றே உருவாக்கப்பட்ட பதவி மாதிரி? நம்ம கவர்னர் ஊட்டிக்கு ஜாலியகச் சுற்றுலாப் போனாராம். சம்சாரத்துக்கு அந்த ஜில் கிளைமேட் ஒத்துக்கலையாம், திரும்பி வந்துவிட்டார்களாம்.

கடைசி காலத்தில் காசி ராமேஸ்வரம் என்று போவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த அரசியல் வியாதிகள் மட்டும்தான் கவர்னர் பதவி, ஜனாதிபதி பதவி என்று போய்விடுகிறார்கள். பிறகு, அங்கிருந்து அப்படியே அரசு செலவில் ஆஸ்திரியா ஸ்விஸ் என்று கிளம்பிவிடுகிறார்கள்.

போங்க… போய் நல்லா ஊரை சுத்திட்டு வாங்க. உங்களோட பயணத்தினால இங்க ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. எங்க மக்களோட வரிப்பணம்தான் வீணாப்போகுது.. போயிட்டுப் போகுது. குடிமக்களா இருக்கிற எங்களால்தான் என்ஜாய் பண்ணமுடியலை. குடியரசுத் தலைவரா இருக்கிற நீங்களாவது அனுபவியுங்க மேடம்!

ஆனா ஒண்ணு….. கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் கையெழுத்திடப் போகிறேன் என்று சொன்னதுதான் கஷ்டமாக இருக்கிறது. அதற்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்றால்…. உங்களை சோனியாவே விடமாட்டார் என்பது ஊருக்கே தெரியுமே. எதற்கு இவ்வளவு பெரிய பொய்?

ஒரு வேளை அவருடைய அக்கவுண்ட்டை சரி பாக்கத்தான் போகிறீர்களோ? அல்லது புதியதாக 3G பணத்தை டெபாசிட் செய்ய இந்திய அரசின் செலவில் இன்ப சுற்றுலாவா?…. என்கிற சந்தேகங்கள் எல்லாம் எங்களுடைய மனதுக்குள் எழுவதை எப்படித் துடைக்கப் போகிறீர்கள்?

Advertisements

One comment on “ஒரு ரப்பர் ஸ்டாம்பின் அடுத்த பயணம்!

  1. Sir,
    Paathu pesunga. Piragu Inthiya irayanmaikku kalangam vilaivithuvitteergal endru case poduvangaa.. appuram ungalukku kaztam. Neenga enna Arasiyalvaathiya ? udaney veliya varuvatharkku.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s