சைதையாரின் வெற்றி….. ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படட்டும்!

“உங்களது தொகுதிக்கு அறிவிக்கப்படுகிற வேட்பாளர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்? அப்படிப்பட்டவரை நான் தருகிறேன்!” என்று இறைவன் என்றாவது ஒருநாள் நமக்கு முன்பாகத் தோன்றிக் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமானால்…..

எப்படிப்பட்டவரை நாம் சொல்ல நினைப்போமோ அப்படிப்பட்டவர்தான்— சென்னை மாநராட்சி மேயர் வேட்பாளராக அ.இ.அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அவர்தான்….. சைதையார் என்றும், சைதை துரை என்றும் எல்லோராலும் பாசம்பொங்க அழைக்கப்படுகிற சைதை சா.துரைசாமி !

அரசியல்வாதியாக இருந்தும், ஒரு அரசியல்வாதிக்கு உண்டான அடையாளங்களைத் தன்மேல் அப்பிக்கொள்ளாதவர் என்கிற பெருமைக்குரியவர்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அவர் களம் இறக்கப்பட்டபோது, ஒட்டுமொத்த அரசியல் உலகமும் அவரைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த்தது. ஆனால், ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவருடைய வெற்றி மறுக்கப்பட்டபோது….

அது அரசியல் வித்தை என்று ஒதுக்கப்பட்டதே தவிர, அது அவரது தோல்வி என்று செதுக்கப்படவில்லை.

இந்த நல்ல நேரத்தில்…. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், சைதையாரின் வெற்றியைக் கைநழுவச்செய்த கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் கொஞ்சம் நன்றி சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அவருடைய ஆற்றல் பூர்வமான உழைப்பு, அனுபவ பூர்வமான செயல்பாடு, தெளிவான திட்டமிடலுடன் கூடிய தொலைநோக்குச் சிந்தனை கலந்த பணி….. கொளத்தூர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் மட்டும் அடங்கி விடாமல், சென்னை மாநகராட்சி முழுமைக்கும் கிடைத்திட வழிவகை செய்தவர்கள் அவர்களல்லவா?

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் (1984) சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து திறம்படப் பணியாற்றியவர். அரசியல், கல்வி, சமூகப்பணி என பொதுவாழ்வின் அனைத்துக் களங்களிலும் எண்ணறறவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமாகத் திகழ்ந்து வருபவர்.

தனது மனிதநேய அறக்கட்டளை மூலம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,மற்றும் தமிழக அரசின் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது மையத்தில் படித்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்று இந்தியா முழுவதும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,அதிகாரிகளாக உள்ளனர்.

வேளச்சேரியில் இலவசத் திருமண மண்படம் நடத்தி வருகிறார்….. எண்ணற்ற ஏழைகளுக்கு, ஆதரவற்ற முதியோருக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கிவருகிறார்…. இப்படி சத்தமில்லாமல் எத்தனையோ சாதனைகள்….

இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற இவர்…. முதல் முறையாக சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நாளைய நாட்களில் இவரைப் போன்ற வேட்பாளர்களே எல்லாக் கட்சிகளாலும் நிறுத்தப்படும்பொழுது…. நம்மைப் போன்ற சிலரால் தேடப்படும் 49(ஒ) பிரிவுக்குக்கூட வேலையில்லாமல் போகும்.

சைதையாரின் வெற்றி….. ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படட்டும்!


இவரைப்பற்றி..!

 பெயர் :     சா. துரைசாமி 
 தந்தை :   திரு க சாமியப்பன்
 தாயார் :   திருமதி மாரியம்மாள் சாமியப்பன்
 மனைவி: திருமதி மல்லிகா துரைசாமி்
 மகன் : திரு வெற்றி துரைசாமி
 மருமகள் :  திருமதி வசுந்தரா வெற்றி
 திருமணம் : கலப்புத் திருமணம்
 பிறந்த ஊர் : தும்பிவாடி கிராமம், கரூர் மாவட்டம்
 கல்வித் தகுதி : பள்ளி இறுதி வகுப்பு
 பிறந்த தேதி : 16.02.1952 வயது : 59
 

வகித்த பதவிகள் : * குடிசைமாற்று வாரிய உறுப்பினர்
 *சென்னை மேம்பாட்டு கழக உறுப்பினர்
 * சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
 (1984-1987) நான்குமுறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
* அண்ணா திமுக-வில் தென்சென்னை மாவட்டக் கழக செயலாளராக பணியாற்றினார்.
 

வகிக்கும் பதவி :    தலைவர் மற்றும் நிறுவனர்,
மனிதநேய அறக்கட்டளை, 
மனிதநேயம் ஐ.ஏ.எஸ் இலவசக் கல்வியகம்,
எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை.
 சென்னை – 600 035.                                                                                                                                                                                                    

                                    மனிதநேயம் ஐ.ஏ.எஸ் இலவசப் பயிற்சி மையம்

தற்போது அண்ணா நகரில் செயல்பட்டுவரும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் இலவசப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு 1500 மாணவ மாணவியரும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுப் பயிற்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2000 நடுத்தர மற்றும் ஏழைக் குடும்ப மாணவர்களும் பயின்று வருகின்றனர். 

8 comments on “சைதையாரின் வெற்றி….. ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படட்டும்!

  1. “Right Man in the Wrong Party?”……. என்கிற வார்த்தைகளும் நினைவுக்கு வருகிறதே. என்ன செய்ய?

  2. யாருஅன்னா நகர்ல அது செந்திநாதன் சாரா? வாங்கோ வாங்கோ…. அண்ணா நகர்ல இருந்துக்கிட்டு தம்பி கார்த்திக் மாதிரி பேசறீங்களே… எல்லாக் கட்சியிலேயும் புத்தரையும் யேசுவையும் நிறுத்துற மாதிரி வருத்தப்படறீங்களே.
    ஒட்டு மொத்தத்திலேயே இவரு ஒருதத்ர்தான் நல்லவரா கண்ணுல படறார். அது பொறுக்கலியா உங்களுக்கு?

  3. கட்சியும் வேண்டாம், மண்ணும் வேண்டாம். ஒழுங்கா அந்த புனிதனுக்கு வாக்களியுங்கள்.

Leave a comment