“சொல்றாங்க….. நம்புங்க!”

மத்திய அமைச்சர்களின் சொத்து விபரப் பட்டியல் பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளின்படி, அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய மற்றும் தங்களைச் சார்ந்தவர்களுடைய சொத்துமதிப்பு விபரங்களை வெளியிடவேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

அது என்ன அவ்வளவு எளிதாகக் கொடுத்துவிடக் கூடிய விஷயமா என்ன?.

முதலில், எங்கெங்கே சொத்துக்களை வாங்கிப் போட்டிருக்கிறோம் என்று தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். அதற்குப் பிறகு அது தன்னுடைய பெயரில் இருக்கிறதா? அல்லது பினாமி பெயரில் இருக்கிறதா என்று இனம் பிரிக்கவேண்டும். கைக்கு அடக்கமான கணக்குக்குள் வருகிற மாதிரி மதிப்பைச் சரிசெய்ய வேண்டும்.

இவ்வளவு சீரியசான வேலைகள் இதற்குள் இருக்கும்போது…. உடனே தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டால் எப்படி முடியும்? அப்படி என்ன அவசரம், 3 நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்புகிற அளவுக்கு? கணக்கில் கோல்மால் பண்ணுவது என்ன விளையாட்டுக் காரியமா? கொஞ்சம் லேட் ஆகத்தானே செய்யும்.

ஒருவழியா முட்டி மோதி சொத்து விபரங்களை வெளியிட்டாச்சு. அப்படியிருந்தும் இன்னும் 10 மந்திரிங்க சொத்து விவரத்தைக் கொடுக்கலே. (ஒரு வேளை சொத்து எதுவுமே இல்லையோ என்னவோ?)

நம்ம பிரதமர் மன்மோகன் சிங்கோட சொத்து மதிப்பு வெறும் 4.98 கோடி. (பாவம், யாராவது அவரோட கமிஷனை அவருக்குக் கொடுத்தாதானே?)

நிதி அமச்சர் பிரணாப் முகர்ஜி- 1.8 கோடி. (ரொம்பப் பாவமானவர்?)

நம்ம சிதம்பரம்– 11 கோடி. (இந்த ஒரு கணககை வைத்தே எல்லாரோட கணக்குமே பொய்க் கணக்குதான்னு தெரிஞ்சிக்கலாம்!)

தயாநிதி மாறன் அவசரத்தில் தனது சொத்து விவரத்திற்குப் பதிலாக அவருடைய மூன்றாவது பி.ஏ. வின் சொத்து விவரத்தை வெளியிட்டு விட்டார் என நினைக்கிறேன்.

ராணுவ அமைச்சர் அந்தோணி– வெறும் 2 லட்சம்.

இப்படிப் போகிறது சொத்துப் பட்டியல்… அமைச்சர் கமல்நாத் மட்டும் 250 கோடிக்கும் மேலே கணக்குக் காட்டியிருக்கிறார்.

விபரங்களை வெளியிடுவது அவர்களது கடைமை…. நம்புவதும் நம்பாததும் உங்களது உரிமை.

அத்தனை அமைச்சர்களோட கணக்கையும் பார்த்தால்….நமக்கு தலை 360 டிகிரிக்குச் சுற்ற ஆரம்பித்துவிடும்.

கொடுக்கப்பட்டிருக்கிற அமைச்சர்களின் சொத்து விபரங்களில் பல முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. உதாரணமாக, மு.க.அழகிரி தேர்தல் வேட்பு மனுவில் ஐம்பத்து நான்கு கோடிகள் இருப்பதாகக் காட்டி இருந்தார், இப்போது வெறும் முப்பத்தெட்டு கோடியாகிவிட்டது. சுமார் முப்பது வருடங்களாக அரசியலில் பவனி வரும் சிதம்பரத்திற்கு சொத்து வெறும் பதினோரு கோடி அளவில்தான் இருக்கிறதாம். (இன்னும் சைக்கிள் வைத்திருக்கிறாராம்).

சரத்பவாரின் சொத்து மதிப்பு பதினாறு கோடி என்கிறது அட்டவணை. ஆனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரிக்கெட் பங்குகள் மட்டும் 22.25 கோடிகளுக்கு வைத்திருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

எது எப்படியோ…. எல்லா மந்திரிகளும் ஆளாளுக்கு ஒரு பேப்பர்ல ஏதோ ஒண்ணை எழுதிக் கொடுத்துட்டாங்க. சபாஷ்!

சென்னை திருவான்மியூரில் 4,000 சதுர அடி பிளாட், வீட்டின் மதிப்பு ரூ.36 லட்சமாம் ! – எந்தக் காலத்து ரேட்டு சார் இது? கதை விடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா?

பலே…பலே…. அமைச்சர்கள் கொடுத்துள்ள விலைப்படியே அந்த சொத்துக்களை அவர்கள் விற்கத்தயாரா என்று யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்… வாங்குவதற்கு ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.

கி.மு…… கி.பி….. என்கிற மாதிரி, இனிமேல் அ.மு (அரசியலுக்கு முன்)….அ.பி. (அரசியலுக்குப் பின்) என்றுதான் எல்லா அரசியல்வதிகளிடமும் சொத்துக் கணக்கை வாங்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். 

 

+++++++++##################++++++++++++

இன்றைய அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்குகள்தான் கோடிகளில்….. ஆனால், நமது முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்கள் இறந்தபோது….. அவருடைய சொத்துக் கணக்கு வெறும் 300 ரூபாயைக் கூடத் தாண்டவில்லை!

அவரது சொத்துப் பட்டியலைப் பாருங்கள்….
சட்டைப் பையில் – ரூ.100, வங்கிக் கணக்கில் ரூ.125
கதர் துண்டு- 4, கதர் வேட்டி – 4, கதர் சட்டை- 4
செருப்பு – 2 ஜோடி, மூக்குக் கண்ணாடி- 1, பேனா- 1
சமையலுக்குத் தேவையான் பாத்திரங்கள் சில….

வெட்கப்பட வேண்டியது யார்?

Advertisements

9 comments on ““சொல்றாங்க….. நம்புங்க!”

 1. நானும் அந்த பிரதமருடைய வலை தளத்தை உத்து உத்து பாக்கிறேன் எங்க இருக்குன்னு தெரியல சாமி, நீங்களாவது அந்த சொத்து விவரங்கள் இருக்கும் பக்கத்தின் இணைப்பை தாருங்களேன்..

 2. அது அப்படியெல்லாம் தெரிந்து விடக்கூடாது என்றுதானே உள்வேலை செய்து மறைத்து வைத்திருக்கிறோம்…. அதைப் போய் எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள்? சிதம்பரம் பார்த்திருந்தால் என்ன ஆவது? நல்லவேளை….

 3. //அத்தனை அமைச்சர்களோட கணக்கையும் பார்த்தால்….நமக்கு தலை 360 டிகிரிக்குச் சுற்ற ஆரம்பித்துவிடும்.”//

  சரிதான், இதனைப்பற்றிப்படித்து விட்டு, ஜீரணிக்க முடியாமல் ஒரு ஜிஞ்சர் டீ அல்லது ஸ்பெஷல் டிகிரி காப்பி சாப்பிடவேண்டும். என்னத்த சொல்ல!!

  அவனவன் 8 முதல் 6 அல்லது 9 முதல் 6 என்று இரத்தம் சிந்தி சம்பாதித்து விட்டு, வருமானவரியை சம்பளத்தைக் கண்ணால் பார்ப்பதற்கு முன்பே கட்டிவிட்டு, பொண்டாட்டி புள்ளைகளைப் பேணிக்காக்கவும், படிக்க வைக்கவும், பெற்றோரைக் காக்கவும் இத்தனைக்கும் மீறி கொஞ்சம் முடிந்தால் கொஞ்சம் சேமித்து சொந்த வீடு 15 அல்லது 20 ஆண்டுத்தவணையில் வாங்கினாலும், அதை அடைப்பதற்குள் விழி பிதுங்கிவிடுகிறது. கேரளத்து ஏ.கே. அந்தோணி தவிர இன்ன பிற அயோக்கியர்கள் சொத்து சேர்த்தபின், பொய்க்கணக்கு காண்பிப்பதைப் பார்க்கும்போது, நம் பணி பார்க்கும் முதலாளியிடம், இனிமேல் சம்பளம் வரிபிடிக்காமல் அப்படியே கத்திமுனையில் வாங்கிக்கொள்ளணும் போலுள்ளது.

  மேற்சொன்ன கடமைகளுக்கு நடுவே நடுவயதில் நமக்காக இலவு காத்த கிளியாகக் காத்திருக்கும் இழவு நாயகன் (எமன்) காட்டும் நோய் இத்யாதி முக்திப்ப்யயணத் தடயங்களை வேறு நம் சொந்தக்காசில் சமாளிக்க வேண்டும், வேறு என்னத்த சொல்ல !!

 4. காமராஜ் கோடானுகோடிகளில் ஒருவர், அவருக்கு இந்தக் கோடிகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் இருந்தது. அதனால்தான், நீங்களூம் நானும் மொத்தத் தமிழனும் அவரை நினைவில் வைத்துள்ளான்/வைத்துள்ளோம்.

  மற்றவர்களெல்லாம் கேடானுகேடிகள் இல்லையா, கேடிக்குக் கால் முளைத்து கோடியாகி தொடர்ந்து டீ சாப்பிட்டு கோடீஸ்வரனாகி பொய்க்கணக்கு காட்டும் கேடிகளாய் தொடர்ந்து உலாவருகிறார்கள்.

 5. “கேரளத்து ஏ.கே. அந்தோணி தவிர இன்ன பிற அயோக்கியர்கள் சொத்து சேர்த்தபின், பொய்க்கணக்கு காண்பிப்பதைப் பார்க்கும்போது, நம் பணி பார்க்கும் முதலாளியிடம், இனிமேல் சம்பளம் வரிபிடிக்காமல் அப்படியே கத்திமுனையில் வாங்கிக்கொள்ளணும் போலுள்ளது”

  –அருமை. அற்புதமான வரிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s