“சட்டத்தில் ஓட்டையா?…. ஓட்டைக்குள் சட்டமா?”

ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு செய்திகள் இன்றைய விவாதக் களத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஒன்று– தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் (அப்படி ஒரு அமைச்சர் இருக்கிறாரா?) தெரிவித்துள்ள செய்தி.

இன்னொன்று– மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலிக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டுக்குப் பதிலளிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி.

தீர்மானம் யாரையும் கட்டுபடுத்துவதற்காகப் போடப்பட்டது அல்ல சல்மான் குர்ஷித் அவர்களே…. நீதி, நேர்மை, தர்மம், மனிதாபிமானத்தின் அடிப்படையில் உலகத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொருட்டு தமிழக முதல்வரால் நிறைவேற்றப்பட்டது! அதை நீங்கள் ஒன்றும் பார்க்கவேண்டாம். யார் பார்க்கவேண்டும்? எப்போது பார்க்கவேண்டும்? எப்படிப் பார்க்கவேண்டும்? எப்படிப் பார்க்கவைக்க வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.

தமிழக சட்டமன்றத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

இப்படித்தான் அன்னா ஹசாரே என்கிற தனி மனிதனின் கோரிக்கைக்கு எல்லாம் ஓர் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது என்று சொன்னீர்கள்…. இறுதியில் என்ன நடந்தது? எங்கே போனது உங்களின் சட்டம்? ராம்லீலா மைதானத்தில் எல்லாம் சட்டம் இயற்ற முடியாது என்று பீலா விட்டாரே சிதம்பரத்தார்….. கடைசியில் எங்கே போய் வைத்துக்கொண்டீர்கள் உங்கள் முகத்தை?

அப்படித்தான் இந்த சட்டமன்றத் தீர்மானமும்! ஏழு கோடி மக்களின் பிரதிநிதிதான் இந்த சட்ட மன்றம் ! தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முயற்சித்துப் பாருங்கள்…. அப்போதுதான் தெரியும் அதன் அருமை.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதமே மத்தியஅரசைக் கட்டுப்படுத்தும் போது…. சட்டசபைத் தீர்மானம் ஏன் கட்டுப்படுத்தாது? என்கிற நியாயமான கேள்விக்கு என்ன பதில் உங்கள் கைவசம் இருக்கிறது?

அதெல்லாம் சரி… வெளியில் மட்டும் சிங்கமாகச் சீரும் காங்கிரசார் சட்டசபையில் தீர்மானத்திற்கு எதிராக ஒன்றும் பேசாமல் ஏன் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்களாம்?
முதலில் உங்க கட்சியே உங்க கட்டுப்பாட்டில இல்லை….. இத்தாலி கட்டுப்பாட்டில இருக்குது. பெருசாப் பேச வந்துட்டாரு கட்டுபடுத்தறதப் பத்தி.

இதைவிட வெட்கக்கேடு…. அந்த இரண்டாவது விஷயம்…..

ஒட்டு மொத்த உலகமும் உற்றுநோக்கும் இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு எந்தவிதமான காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டுக்குப் பதிலளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைக்க இதைவிட வேறு எந்தப்பதிலும் தேவையில்லை.

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது இந்திய ஜனாதிபதியின் பணிகளுக்குக் காலவரம்பு என்று எதுவும் கிடையாது. அரசியல்வாதிகளால் அவசரப் படுத்தப்பட்டால் மட்டுமே சில் பணிகளை அவசர அவசரமாகச் செய்யவேண்டும். பக்காவான ரப்பர் ஸ்டாம்பு என்பதைப் பகிரங்கப்படுத்துகிறார்கள். இவ்வளவு வேகமான உலகத்தில், 21 வருஷத்திற்குப் பிறகு தண்டனை கொடுக்கும் நமது சட்ட அமைப்பைப் பாரட்ட இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

கருனைமனுக்களைப் பரிசீலிக்க சட்டத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்கிற மத்திய அரசின் பதில் கேலிக்கு உரியது. சாதுர்யமாகச் செயல்படுவதாக எண்ணி சறுக்கிவிழத் துடிக்கிறார்கள். எவ்வளவு கேவலமான பதில் இது என்பதை உணர்ந்துதான் செய்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திரம் வீணாகப் போய்விட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 65 ஆண்டுகளாகியும் கூட நம்மை நாமே (தெளிவான சட்ட திட்டங்களுடன், குழப்பமற்ற நடைமுறைகளுடன்) ஆண்டுகொள்ளத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.

இப்போது நடக்கும் அரசியல் கூத்துக்களுக்கும், சட்டச் சிக்கல்களுக்கும் மத்திய அரசுகளே காரணம்… 11 ஆண்டுகளாகக் கருணை மனுக்களைக் கிடப்பில் போடுவது முட்டாள் தனத்திலும் கேடு கெட்ட முட்டாள்தனம்… ஒரு கருணை மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்கவே 11 வருடங்கள் என்றால்…. இவர்கள் வேறு எதைத்தான் எளிதாகாக் கிழித்துவிடப் போகிறார்கள்?. பிற நாட்டுக்காரன் இதையெல்லாம் கேள்விப்பட்டுவிட்டுப் பின்பக்கமாகச் சிரிப்பான்.

உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தித் தலையிட்டு…. மத்திய அரசையும், உள்துறை அமைச்சகத்தையும் கேள்வி கேட்க வேண்டும். இதெல்லாம் கூடக் கவனிக்காமல் என்ன வெங்காயத்திற்கு ஒரு சட்ட அமைச்சர்? ஒரு உள்துறை அமைச்சர்? ஒரு வீணாய்ப்போன அமைச்சரவை?

சட்டத்தில் ஓட்டை இருக்கிறதா? அல்லது ஓட்டையில்தான் சட்டம் இருக்கிறதா? என்பதை….. இனிமேலாவது தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.

இந்த வழக்கின் மூலமாவது ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்!.

3 comments on ““சட்டத்தில் ஓட்டையா?…. ஓட்டைக்குள் சட்டமா?”

 1. Excellent post. I agree with you.

  உங்கள் தலைப்புக்கு என் மறு மொழி இதுதான்:

  ஓட்டையே உன் பெயர்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமா?

 2. For your 2nd question to P Chidambaram (sorry and apologies if this response you find it so crude and distasteful or indescent):

  சிவகங்கைச் சீமானின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டபோதே தெரியலையா நம் உள்துறை என்ன பு…….ங்குகிறது என்று?

  இவர்களெல்லாம் இப்போது உணரமாட்டார்கள். ஏனெனில் இவர்கள் தலைவன் சாய்க்கப்பட்டபோது இவர்களும் இவர்களது குள்ள நரிக்கூட்டமும் முத்தமிழறிஞரும் எங்கே ஓடி ஒளிந்தார்கள் என்று கேள்வி கேட்டால் பதில் வராது? அன்றைய தினம் தாத்தா தன் கட்சிக்கூட்டத்தி திருப்பெரும்புதூரிலிருந்து கடைசி நிமிடத்தில் தேதி மாற்றினார் என்று ஒரு ஊடகம் சொல்கிறது. அம்மாவோ கேட்கவே வேண்டாம்!! கூட்டணிக்கட்சியின் தேசியத் தலைவர் வருகிறார் என்று தெரிந்திருந்தும், அவரும் தந்திரமாக கூட்டத்தை தவிர்த்துவிட்டார். 20 ஆண்டுகள் கழித்து இந்த நாதாரிக்கூட்டம் ஆளுக்கொரு ஆசையுடன் ஆளுக்கொரு சமாளிபிகேஷன் செய்கிறார்கள்.

  இவர்களுக்கு உரைக்க வேண்டுமெனில், இவர்களின் பின்பக்கம் மூல வியாதி வருமே அங்கே வலிக்க வேண்டுமெனில், எந்தப் புண்ணியவானாவது இதைச் செய்ய வேண்டும், அவனுக்கு என் சார்பில் ஒரு ரோஜா மாலை ரோஜாவின் ராஜா எனப்படும் இவர்களின் முப்பாட்டன் பிறந்த நாளிலோ நினைவு நாளிலோ என் செலவில் வழங்க நான் தயார்.

  1) கார்த்தி சிதம்பரத்தையோ யாரையோ பண ரீதியாக வர்த்த ரீதியாக செமையாக ஏமாற்றிவிட்டு சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஒன்றுமே தெரியாததுபோல் ‘ நான் கேள்விப்பட்டேன், 20 ஆண்டுகள் முன்பு உங்களுக்கு ஒரு பேரிழப்பு நிதிவாரியாக ஏற்பட்டதாமே, மிக்க சங்கடமாக இருக்கு’ என்று அங்கலாய்க்கணும்.

  2) இவர்கள் வீட்டுப் புண்ணியவதிகளை (ஓரிருவரையாவது) இலங்கையில் சகத் தமிழன் பட்ட கொடுமைகளின் 10% ஆவது அனுபவிக்க வைக்க வேண்டும்.
  பிறகு 20 ஆண்டுகள் கழித்து ‘ஓ, அப்படியா, இதெல்லாம் நடந்ததா, அச்சச்சோ? என்று பொய்யாக லாவணி பாடிவிட்டு ஒரு சிங்கிள் டீ இவர்கள் செலவிலேயே கூடுதல் சர்க்கரையுடன் அக்கறையில்லாமல் அருந்திவிட்டுப் போகவேண்டும்.

  இவனெல்லாம் நமக்கு மந்திரி, தூ……..த்தெ…….றி!!
  நேரில் பார்த்தால் ச்சும்மா வச்சு வாங்க வேண்டும் போல் ஆத்திரமாக இருக்கு!!

 3. உங்களுடைய ஒவ்வொரு எழுத்திலும் எனக்கு உடன்பாடுதான்…

  முள்ளை முள்ளால்தானே எடுத்தாக வேண்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s