அந்தப் பொண்னுக்கு அம்பது கொடுக்கலாம்!

காதலித்துக் கட்டிய மனைவியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல…. அதைவிடச் சிவப்பாக இன்னொரு தோல் கிடைத்தால் அதிலும் ஒரு மேய்ச்சல் விடலாம் என்று போய்க்கொண்டிருந்த பிரபுதேவாவும்—

கைவிட்டுப் போனவனைப் பற்றிக் கவலை எதற்கு, அடுத்து எவன் மாட்டுகிறானோ அவனை அபகரித்துவிட்டால் போகிறது என்று காத்துக்கொண்டிருந்த நயன்தாராவும் (டயானா மரியம்?)—

ஒன்றுக்குள் ஒன்றாகி உள்ளுக்குள் ஐக்கியமானது எப்போது தெரியுமா?….

அவரது மூத்த மகன் ரத்தப் புற்றுநோயால் இறந்துபோன சோகத்தில் இருந்த போது. (மனசாட்சியே இல்லாத மனித ஜென்மங்கள்?).  முதலில் ஆறுதலைப் பரிமாறிக் கொண்டார்களாம்,  முடிவில் அனைத்தையும் பரிமாறிக் கொண்டார்களாம்!.

இந்த விஷயத்தில் சகித்துக்கொள்ளவே முடியாத இன்னொரு கொடுமை என்னவென்றால்…. பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தையும் காதலித்துத்தான் கைப்பிடித்தார் என்பதுதான்.

பிரபுதேவா நடிகர் ஆவதற்கு முன்பாகவே, சினிமா டான்ஸராக இருந்த ரமலத்தைக் காதலிக்க ஆரம்பித்தார். பிறகு பிரபுதேவா ஹீரோ ஆனபிறகும் கூட காதலில் உறுதியாக இருந்ததால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, 1994-ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆனால் பிரபுதேவா மேல் நம்பிக்கை வைத்துத் திருமணத்தைக் கூட பதிவு செய்து கொள்ளாமல், பிரபுதேவாவுக்காக ரமலத் என்ற பெயரை லதா என்று மாற்றிக்கொண்டு வாழ்ந்தாராம் ரமலத். காதலுக்காகத் தனது மார்க்கத்தையும் கூடக் கைகழுவிவிட்டு, குடுமபத்தாரின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் திருமணம் செய்து கொண்டார் ரமலத்.

பிரபுதேவா-ரமலத்துக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகன் ரத்தப்புற்றுநோயால் இறந்துபோக, அந்தச் சோகத்தில் இருந்த பிரபுதேவாவுக்கு அப்போது ஆறுதலாக இருந்தாராம் நயன்தாரா.

அதையே காரணமாக வைத்து வீட்டுக்கும் அடிக்கடி வந்து ரம்லத்தை அக்கா அக்கா என்று அழைத்துப் பழகினாராம் நயன்தாரா. அவரும் நயன்தாராவை நம்பினாராம். அதற்குப் பிறகுதான் பிரபுதேவா- நயன்தாரா காதல் என்று செய்திகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பிக்க…. கொதிப்படைந்த ரமலத் பொறுமையிழந்து பிரபுதேவாவிடம் நேருக்கு நேராய் கேட்டு விட…..விவகாரம் பெரிதாக வெடித்தது.. பிறகுதான் நீதிமன்றம், மூன்று வீடுகள், பத்துக்கோடி…. விவாகரத்து எல்லாமே.

முதல் திருமணத்திலும் மதமாற்றம். இரண்டாவதிலும் மதமாற்றம். ஆனால், இரண்டிலுமே மனமாற்றம் மட்டும் இல்லை. (பரவாயில்லை பிரபுதேவா… விரைவில் மூன்றாவது நான்காவது என்ற மணவிழாச் செய்திகளை எதிர்பார்க்கிறோம்.. எங்களிடம் மணவிழா வாழ்த்துக்கள் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொருமுறை மணவிழா நடக்கும்போதும் அள்ளி அள்ளி வழங்குவோம். மீண்டும் வாழ்த்துக்கள்).

சினிமாத் துறையில் சுகம் தேடி அலைவது ஒரு பெரிய விஷயமே அல்ல. தனது இரண்டு குழந்தைகளின் மனநிலையை பற்றிக் கொஞ்சமாவது பிரபுதேவா நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அதேபோல நம்பிக்கைத் துரோகத்தின் விலை என்னவென்று நயன்தாராவும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். (கவலை விடுங்க நயன்தாரா….. குண்டாக இருந்த ரம்லத்துக்கே பத்துக் கோடி, மூணு வீடு… நல்லா ஸ்லிம்மா கொடி மாதிரி இருக்குற உனக்கு அம்பது கோடியாவது கேக்கலாம்)

இருவருமே ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்….. அடுத்தவர்களின் வாழ்க்கையோடு விளையாடிச் சந்தோஷப்படுவதற்கு–

இது ஒன்றும் சினிமா அல்ல!

Advertisements

4 comments on “அந்தப் பொண்னுக்கு அம்பது கொடுக்கலாம்!

 1. உங்கள் அட்வைஸ் எல்லாம் சினிமாக்காரர்களை பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்கு..!
  ஆமாம்.. என்ன போரடிக்கிறதா.. நயன்தாராவிற்கெல்லாம் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்..

 2. நயன்தாராவிற்கான அட்வைஸ் அல்ல அது…. வாழ்க்கையே சினிமா மாதிரி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தின் வெளிப்பாடு…

 3. வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வருமே அதுதான் இப்போது நினைவிக்கு வந்து தொலைக்கிறது.

  “ஏம்மா, நீ அவனுக்கு எத்தனையாவது?

  ம்……..ஐந்தாவது.

  அவன் உனக்கு?

  ஏழாவது.

  டேய், நீ வையை மூடுடா, அங்கிட்டு ரெண்டு லீடிங்ல போய்க்கிட்டிருக்கு”

  கருமம்டா சாமி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s