வெளிச்சத்தில்தான் இருக்கிறார்கள்…. விளக்குப் பிடிக்க வேண்டாம்!

வன்முறை மற்றும் ஆபாசப் படங்களுக்கு இனிமேல் வரிவிலக்குக் கிடையாது என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். கலைஞர் தனது கடந்த கால ஆட்சியில் திரையுலகத்தினருக்கு அளித்த மாபெரும் சலுகை, தமிழில் பெயர் வைத்தால் அந்தப்படத்துக்கு முழு வரிவிலக்கு என்று அறிவித்ததுதான்.

இந்த வரிவிலக்கால் யாருக்கு லாபம்? ஏழைக் கூலித் தொழிலாளிக்கா? ஒருவேளை சோற்றோடு மட்டும் ஓடியாடி உழைப்போடு போராடிக்கொண்டிருக்கிற அதே சினிமாத்துறையின் அடிமட்ட ஊழியனுக்கா? லைட் பாய்க்கா? மேக்கப் மேனுக்கா? யாருக்கு லாபம்? இந்த வரிவிலக்கால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், கூடவே கலைஞரின் பேரன்களும்தான் நல்ல லாபம் பார்த்தார்கள்.

கலைஞர் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து, ஆட்சி ‘டமால்’ ஆன நாள் வரையிலும் சுமார் 1,300 படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எத்தனை நூறு கோடிகளோ? இதெல்லாம் யார் அப்பன் வீட்டுப்பணம்?

செம்மொழி மாநாடு நடத்தியே ஒரு வெங்காயமும் ஆகவில்லை. படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடுமா என்ன? வரிவிலக்குப் பெறுவதற்காக பெயரை மட்டும் தமிழில் வைத்து விட்டு, தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காட்சிகளைக் கொண்ட படங்கள் அதிக அளவில் வெளிவந்து அரசாணையின் பலனை அறுவடை செய்தன.

அவளோட ராவுகள், அஞ்சறைக்குள்ள வண்டி போன்ற பலான படங்கள் எல்லாம் கூட– மாமியாரின் காம வெறி, தினம் தினம் தீராத பசி என்று தமிழுக்குத் தாவின. சென்ற ஆண்டு வெளிவந்த சில தமிழ் படங்களின் பெயர்களைப் பாருங்கள்…. அம்பாசமுத்திரம் அம்பானி, தில்லாலங்கடி, பாணா காத்தாடி, எந்திரன், பாஸ் என்ற பாஸ்கரன், மைனா, குவார்ட்டர் கட்டிங், சித்து +2, கோட்டி, சிக்குபுக்கு, குட்டி, கோவா, கொலை கொலையாம் முந்திரிக்கா, மிளகா…… தமிழ் வாழாமல் என்ன செய்யும்?

“வள்ளுவன் வாசுகி ” என்று தமிழ்ப் பெயர் வைத்து ஒரு படம். அதன் போஸ்டரோ “ஏ ” பட அளவிற்கு இருந்தது .அதற்கும் வரிவிலக்கு. “சிவாஜி”ன்னு ஒரு படம் வந்ததே, அதுக்கு எதுக்கு வரிவிலக்கு? சிவாஜியை எப்போ தமிழ்ப் பெயரா மாத்துனீங்க?

ஆனால், இந்த நேரத்தில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொண்டாகவேண்டும். “ஏ”சான்றிதழ் பெற்ற படங்கள் எதற்குமே வரிவிலக்குக் கிடையாதென்றால்…… அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, குருதிப்புனல், நாயகன் போன்ற தரமான படங்களும் “ஏ” சான்றிதழ் பெற்ற படங்கள்தான் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

சமீப காலத்திய தமிழ்த் திரைப்படங்களில், ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகள் அளவுக்கு அதிகமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன. எப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டு வந்தோமோ, அந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

“சக்கரவள்ளிக் கிழ்ங்கே சமைஞ்சது எப்படி”யில் தொடங்கி, “புள்ளகுட்டி பெத்துக்கிட்டுக் கட்டிக்கலாமா” வரை…. படுக்கையறைச் சமாச்சாரங்கள் அத்தனையும் பச்சையாகவே புரியவைக்கப்படுகின்றன. “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கெட்டுக்கு வராத குண்டு மாங்கா” என்று பேருந்தில் பாட்டுபாடுகிற பொழுது பெண்பிள்ளைகள் என்ன பாடுபடுவார்கள்?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாடு தேவைதான். இன்னும் இதுபோலத் தேவை இல்லாமல் அரசின் வருமானம் எங்கெங்கெல்லாம் வீணாகிறதோ அவைகளையும் தடுக்கவேண்டும். தமிழகத்தில் பல்வேறு நலிவடைந்த தொழில்துறைகள் எத்தனையோ இருக்கும்போது, வளம்கொழிக்கும் திரைத்துறைக்கு என ஸ்பெஷலாக எந்தொரு சலுகைகளையும் இனி அறிக்கக்கூடாது.

சினிமாத்துறைக்கு என்ன கேடு வந்துவிட்டது என்று வரிவிலக்குக் கொடுக்கிறீர்கள்? நட்சத்திர ஓட்டல் சப்பாடு, சர்வ சாதாரணமாக விமான சவாரி, ஓய்வெடுப்பதற்குக்கூட ஏ.சி. கேரவன், லட்சக்கணக்கில் சம்பளம், சொகுசான வாழ்க்கை…. என்ன இல்லாமல் இருக்கிறது அவர்களிடம்? என்னமோ நாள் முழுவதும் வேகாத வெயிலில் கஷ்டப்படும் விவசாயக் கூலி மாதிரி நினைப்பா? ஏற்கனவே அவர்கள் வேண்டிய அளவுக்கு வெளிச்சத்தில்தான் இருக்கிறார்கள்…. இன்னும் நீங்கள் வேறு விளக்குப் பிடிக்கவேண்டுமா?

சினிமா என்ன மக்களுக்கு அத்தியாவசியத் தேவையா? நூறு இருநூறுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கிப்பார்க்கும் அளவுக்கு சினிமா ஒன்றும் முக்கியமான விஷயம் அல்ல.
எத்தனை பேர் ரசிகர் மன்றம் என்ற பெயரில் குடும்பத்துக்குக்கூட பணம் கொடுக்காமல் தங்கள் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பாலாபிஷேகம் பண்ணுகிறார்கள், குஷ்புவுக்குக் கோயிலே கட்டினார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதில் இருந்து நேரத்தை வீணாகத் திருடுவது இந்த சினிமா.

இதையெல்லாம் தாண்டி, சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால்…..

சமுதாயச் சிந்தனையுடன் கூடிய கதைக்குக் கொடுங்கள்.
மனதைத் தொடுகிற மாதிரியான அவார்டு படத்துக்குச் சலுகை காட்டுங்கள்.
அந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர் என சம்பந்தப்பட்ட அனைவரும் வருமான வரியை ஒழுங்காக கட்டி இருந்தால் மட்டுமே வரிவிலக்குக் கிடைக்கும் என்று வலியுறுத்துங்கள்.

பார்க்கலாம்– இனிமேலாவது படங்கள் எப்படி வருகின்றன என்று!

Advertisements

6 comments on “வெளிச்சத்தில்தான் இருக்கிறார்கள்…. விளக்குப் பிடிக்க வேண்டாம்!

 1. சினிமாவில் இந்த “வரிவிலக்கு என்றால் என்ன” என்றே எனக்குப் புரியவில்லை.
  எனது சிறு வயது காலத்தில் மை டியர் குட்டித்சாத்தான் போன்ற சிறுவர் படங்கள், காந்தி, ராகவேந்திரர் போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் திரையிடப்படும் போது, ‘வரிவிலக்கு பெற்ற படம்’ என விளம்பரப்படுத்துவார்கள். அந்த படத்தை நாங்கள் வழக்கமாக பார்க்கும் தொiகையைவிட பாதிப் பணம் கொடுத்துத் தான் பார்ப்போம். (அதாவது அப்போது முதல் வகுப்பு ரூ.5 இருந்ததை நாங்கள் வெறும் இரண்டரை ரூபாய் அல்லது மூன்று ரூபாய்க்கு தான் பார்ப்போம்). இது ரசிகனுக்குத் தான் லாபம். ஒரு நல்லத் திரைப்படத்தை காண அரசு செய்யும் ஊக்கமாகவும் ஆகிறது.
  ஆனால் இன்றைய வரிவிலக்கு தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபத்தை கொட்டித் தருகிறது. மேலும் தமிழ்ப்பெயர் என்பதால் “வரிவிலக்கு” பெற்ற எந்திரன் படத்தை வழக்கமாக காணும் தொகையைவிட இரண்டரை மடங்கு அதிகம் கொடுத்துத் தான் திரையரங்கில் பார்த்தேன்.
  எனவே தயவு செய்து ‘அந்த’ (காந்தி) வரிவிலக்கிற்கும், ‘இந்த’ (எந்திரன்) வரிவிலக்கிற்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால் எனக்குக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். புரியவையுங்கள்.

 2. //மனதைத் தொடுகிற மாதிரியான அவார்டு படத்துக்குச் சலுகை காட்டுங்கள்.
  அந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர் என சம்பந்தப்பட்ட அனைவரும் வருமான வரியை ஒழுங்காக கட்டி இருந்தால் மட்டுமே வரிவிலக்குக் கிடைக்கும் என்று வலியுறுத்துங்கள்.
  பார்க்கலாம்– இனிமேலாவது படங்கள் எப்படி வருகின்றன என்று!//

  sirantha alosanai… vaalththukkal

 3. எல்லாக் காலத்திலும் வரிவிலக்கு ஒரே மாதிரிதான். அப்போதெல்லாம் வரிவிலக்குக் கிடைத்தால், டிக்கெட் விலையைக் குறைத்து அதன் பலனை ரசிகர்களையும் அனுபவிக்கச் செய்தார்கள். இப்போது அப்படியல்ல… “வரி ஏய்ப்பு” மாதிரி “வரிவிலக்கு ஏய்ப்பு” செய்கிறார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

 4. “வள்ளுவன் வாசுகி ” என்று தமிழ்ப் பெயர் வைத்து ஒரு படம். அதன் போஸ்டரோ “ஏ ” பட அளவிற்கு இருந்தது .அதற்கும் வரிவிலக்கு”

  பாஸ், உங்களூக்கு ஒரு சமாசாரம் புரியவில்லை. வள்ளுவன் வாசுகி பட விளம்பரத்திற்கு வரிவிலக்கு தந்ததற்கு நாமெல்லோரும் புரிந்து கொண்ட அர்த்தமில்லை. ஏன் மாற்றி யோசிக்கக் கூடாது (சற்றே ஏடாகூடமாக இருப்பினும்) இப்படி:

  அந்த அம்மணி போட்டிருக்கும் ஜாக்கெட்டில் ஒரு கோடு தெரிகிறதே (வரி போல) அந்த வரிகூடத் தெரியக் கூடாது, வரியை விலக்குடா என்று அந்த ஓவியனுக்கு (சித்திரம் வரைந்தவனுக்கு) சொல்வதாக்கூட எடுத்துக் கொள்ளலாமே?

  ஒரு பேச்சுக்குத்தான் இதைப் பதிவு செய்தேன், ஆபாசத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை (டிஸ்கிளைமர் ப்ளீஸ்!!).

 5. சமுதாயச் சிந்தனையுடன் கூடிய கதைக்குக் கொடுங்கள்.
  மனதைத் தொடுகிற மாதிரியான அவார்டு படத்துக்குச் சலுகை காட்டுங்கள்.
  அந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர் என சம்பந்தப்பட்ட அனைவரும் வருமான வரியை ஒழுங்காக கட்டி இருந்தால் மட்டுமே வரிவிலக்குக் கிடைக்கும் என்று வலியுறுத்துங்கள்.
  பார்க்கலாம்– இனிமேலாவது படங்கள் எப்படி வருகின்றன என்று!

  ச்சும்மா நெத்தியடி ஆலோசனை. இதெல்லாம் யார் காதில் விழப் போகிறது? செவிடன் காதில் ஊதிய சங்கு போல!!!!

 6. நல்லவேளை… உங்களுடைய யோசனை “வள்ளுவன் வாசுகி ” படக்குழுவினருக்குத் தெரிந்திருந்தால்…. ஜாக்கெட்டில் தெரியும் அந்தக் கோடும் தெரியாமல் போயிருக்கும்…. எல்லாத்தையுமே நல்லா மாத்தி யோசிக்கிறீங்க சார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s