தொப்புளுக்குத்தான் எத்தனை மரியாதை!

தொப்புள், தொப்புள் கொடி என்பது எவ்வளவு புனிதமானது…

ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும் வரை அதற்குத் தேவையான ஆகாரம் மற்றும் ஆக்சிசனை, தொப்புள் கொடி மூலம் தான் பெறுகிறது. அதைப் போலவே குழந்தையின் குருதியில் உள்ள கழிவுப் பொருட்களைத் தாயின் குருதிக்கு எடுத்துச் செல்வதும் இதன் பொறுப்பே. குழந்தை பிறந்தவுடன் குழந்தை வாயினால் உணவு உட்கொள்ளவும், மற்றும் தன் சுவாசத்தை ஆரம்பித்து விடுவதாலும் இதற்குரிய தேவை இல்லாமல் போவதால், இது வெட்டி அகற்றப் படுகிறது.

உயிரின் அடித்தளமே இந்த தொப்புள் என்பதால்தான்‍, உறவுகளைக்கூட “தொப்புள் கொடி” உறவு என்கிறோம்.

ஆனால், இந்தப் புனிதமான இடத்தைத்தான் நமது சினிமாக்காரர்கள் இப்போது….. பம்பரம் விடுவதற்கும், ஆம்லெட் போடுவதற்கும், தோசை சுடுவதற்கும் என‌… எப்படி எப்படியெல்லாமோ விகாரமாய்ப் பயன்படுத்துகிறார்கள்.

சினிமாக்காரர்களால் நேரடியாக……… க்காட்ட முடியாததால்தான் சிம்பாலிக்காகத் தொப்புளைக் காட்டுகிறார்களோ என்ன கருமமோ?

பாகவதர் காலத்துப் படங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போதெல்லாம் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது.

பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு பிராமணக் குடும்பம். கணவன் ரெக்கார்ட் டான்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெக்கார்ட் டான்ஸ் ஆடிக் காட்டிவிட்டு, போதுமா என்று கேட்பாள். அவன் பரம திருப்தி என்று சந்தோஷ்ப்படுவான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது. பாவம்.

ஆனால் இப்போது?

ஒரு நாயகியின் தொப்புளை வைத்து என்ன என்ன எல்லாம் செய்யமுடியும் என்று ரூம் போட்டுயோசிக்கிறார்கள்…..

பாட்டுக்கும் நடனத்திற்கும் சம்மந்தமே இல்லாவிட்டாலும், தொப்புளையும் மார்பையும் தொடையையும்  காட்டுவதை இவர்கள் நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

நமது தணிக்கைச் சட்டங்களும் எவ்வளவு வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான்.  மலையன் என்று ஒரு படம்.படத்தில் கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி வரும். அதில் நாயகியின் தாவணி காற்றில் விலகி, அவரது தொப்புள் தெரியும். அய்யோ.. தொப்புள் தெரிகிறதே என அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள் நமது தணிக்கைக்காரர்கள்.  ஆனால், அதே படத்தின் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் தொப்புள் உட்பட எல்லாமே தெரியும். ஆனால் அதில் வெட்டு இல்லை! எப்படி வேடிக்கை?

தொப்புளின் மேல் சத்தியம் செய்வது…இதுதான் புது ட்ரெண்ட்!  முன்‌பெல்லாம் சினிமாக்களில் தலையிலும், கையிலும் சத்தியம் செய்து வந்த ஹீரோக்கள், இப்போது சத்தியத்திற்கு புது ஸ்பாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த இடம் தொப்புள்தான். முதன் முறையாக தமிழ் சினிமாவில் இந்தப் புது ட்ரெண்ட்டை (?) அறிமுகப்படுத்துகிறது சங்கரா என்ற படம்.  கதைப்படி ஹீரோயின் அர்ச்சனா,ஹீரோ வாசனை வலியச் சென்று காதலிக்கிறார். காதல் ஜோடிகளுக்கு இடையே சந்தேகப் பேய் நுழைகிறது. வாசன் கார்த்திக் நல்லவனா, கெட்டவனா? என்ற சந்தேகம் அர்ச்சனாவுக்கு வருகிறது. இதனால், ஊரார் வழக்கப்படி என் தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய் என்று நாயகன் வாசனிடம் சொல்கிறார். வாசனும், அர்ச்சனாவுக்கு தொப்புளில் முத்தம் கொடுத்து சத்தியம் செய்கிறார். இப்படியொரு முத்த சத்திய காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இதுபோதாதென்று இன்னொரு ஸ்டைலை வேறு இப்போது கண்டுபிடித்துவிட்டு பாடாய் படுத்துகிறார்கள். காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது என்பதெல்லாம் போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது அதிகரித்துள்ளது. தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாட்டிக்கொண்டு அலைவது அதிகரித்து வருகிறது.தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.

இன்னும் என்னென்ன கருமத்திற்கெல்லாம் இந்த தொப்புள் படாத பாடு படப்போகிறதோ தெரியவில்லை. கடவுளுக்கே வெளிச்சம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s