“கோடம்பாக்கத்துக் கோவணம் ஜாக்கிரதைங்கோவ்..”

என்ன திருஷ்டி பட்டதோ தெரியவில்லை — அடுத்தடுத்து விடாமல் துரத்தி வரும் தொல்லைகளால், ஒட்டுமொத்தக் கோடம்பாக்கமே கொஞ்சம் ஆடிப்போய்த்தான் கிடக்கிறது. ஒரு பிரச்னையில் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்குள், அடுத்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது.

தினமலர் பிரச்னையில் திரையுலகமே ஒன்றுதிரண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்த நாளிளிருந்து ஆரம்பித்தது சனி… அது இன்னும் விட்டபாடில்லை.

சமீபத்தில், சரத்குமாரின் “ஜக்குபாய்’ திரைப்படம், இன்டர்நெட்டில் வலம் வந்து அதிர்ச்சியைக் கிளப்பியது. தியேட்டரில் ரிலீசான படங்கள், இன்டர்நெட்டில் வெளியான காலம் போய், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே, நெட்டில் ரிலீசான முதல் படம் என்ற, “பெருமையை’ ஜக்குபாய் தட்டிச் சென்றது. இதைக் கண்டித்தாக வேண்டும் என, தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் கூடி, நிருபர்களையும், முதல்வரையும் சந்தித்து குமுறினர். விசாரித்ததில், இன்டர்நெட்டில் ஜக்குபாய் ரிலீசானதன் பின்னணியில், ஒரு தந்திரமான சூழ்ச்சி இருப்பதாகத் திரையுலகினர் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

அது ஒருவழியாக அடுத்தகட்டம் நோக்கி நகர்வதற்குள், நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ் உள்ளிட்டோர் வீட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அந்தச் சோதனையில், கிலோ கணக்கில் தங்கமும், ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது, வருமான வரித்துறையினரின் சம்மனை எதிர்கொண்டு, அவர்களிடம் எப்படி சமாளிக்கலாம் என வக்கீல் மற்றும் ஆடிட்டர் வீட்டுக்கு நடையாய் நடந்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள்.

வடிவேலுவின் சிக்கல் இதோடு நிற்கவில்லை. கூடவே நடித்து கும்மியடித்துக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தன்னை ஏழு கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி, மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார் வடிவேலு. இவர் மீது ஏராளமான புகார்களை அள்ளிவிட்டார் சிங்கமுத்து. அவர் அவதூறு செய்ததாக இவர் 25 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்க, இவர் அவதூறு செய்ததாக அவர் 25 கோடியே 50 லட்ச ரூபாய் மான நஷ்டஈடு கேட்க… போலீஸ், புகார், எப்.ஐ.ஆர்., முன்ஜாமீன் என, கோர்ட் படியேறி நிற்கிறது அந்த விவகாரம்.

அடுத்து வீசியது, நடிகை கனகாவின் வீட்டில் புயல். முதல் நாள், தனது கணவரைக் காணவில்லை என்றார். மறுநாள், ஆவி அமுதா மீது சந்தேகம் தெரிவித்தார். அதற்கும் மறுநாள், தன் தந்தை மீது குற்றம் சாட்டினார். ஆக மொத்தம், அவரது சொத்து தொடர்பாக, வலுவான மோதல் வெடித்து வருவது, உலகத்துக்குத் தெரியவந்தது. குடும்பச் சண்டை, நடுத்தெருவுக்கு வந்தது.

கிளைமாக்ஸ் காட்சி, “அசலாக’ பேசிய நடிகர் அஜித் தொடர்பானது. தமிழ்த் திரையுலகம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அத்தி பூத்தாற் போல கலந்துகொண்டார் அஜித். எல்லார் முன்னிலையிலும், முதல்வரை நோக்கி, “அரசு நடவடிக்கை எடுக்கும் முன்னரே திரையுலகைச் சேர்ந்த சிலர், கண்டனம், ஆர்ப்பாட்டம், பேரணி என கிளம்பிவிடுகின்றனர். அவற்றில் பங்கேற்காதவர்களை மிரட்டுகின்றனர்’ என, ஒரே போடாக போட்டார். அதிர்ச்சியில் உறைந்தனர் திரையுலகினர்.

“அப்பாடா! இதோடு முடிந்தது விவகாரம்’ என நினைத்த சினிமாத் துறையினருக்கு, அடுத்த ஆபத்து, முதல்வரின் அறிக்கை வடிவிலேயே காத்திருந்தது. “திரையுலகினர், முதல் நாள் கோபுரம் உயரத்துக்கு தூக்கிப் பிடிப்பர்; மறுநாளே குப்பைத் தொட்டிக்கு தூக்கியடிப்பர்; எல்லாம் தெரிந்து தான் அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகிக்கொண்டிருக்கிறேன்’ என்ற ரீதியில் அவர் அறிக்கை விட, யாரை குற்றம் சாட்டுவது; யார் மீது பாய்வது எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர் திரையுலகினர்

அடுத்து கிழியப்போற ட்ரவுசர் யாரோடதோன்னு அலறிக்கிட்டிருக்குகோடம்பாக்கம்.

ஊம்… எல்லாம் கெட்ட நேரம் போலும்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Advertisements

2 comments on ““கோடம்பாக்கத்துக் கோவணம் ஜாக்கிரதைங்கோவ்..”

  1. கோடம்பாக்கத்துக்காரங்களாவது கோவணத்தைப் பத்திக் கவலைப் படறதாவது….
    நடிக்கறதே ஜட்டியோடதான். அதுவும் உருவிக்கிட்டுப் போனாப்போயிட்டுப் போவுது போங்க!

  2. உண்மையிலேயே கூத்து கட்டுறவங்க நிலைமை மோசமாத்தான் இருக்கு….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s