கபில்சிபல் ஆடும் கண்னாமூச்சி ஆட்டம்!

விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகக் கூறி, நாடுமுழுவதும் உள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அந்தஸ்து ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், கல்வி வியாபாரம் அமோகமாக நடக்கும் நம்ம தமிழ்நாட்டுல‌ மட்டும் 17 பல்கலைக் கழகங்கள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகியுள்ளன. இதனால், பல லட்சம் மாணவர்களும்,பரிதாபத்துக்குரிய பெற்றோர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

எத்ற்கெடுத்தாலும் அவசரகோலமாக இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு இந்த அரசாங்கம் ஏன் செயல்படுதுன்னு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. ஏதாவது புரட்சிகரமான‌ முடிவுன்னு இதை நினைக்குதா? அறிவுப்பூர்வமா சில கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து படிப்படியா ரத்து செஞ்சிருக்கலாம். அதை விட்டுட்டுப்படிக்கிறவங்க, அவங்களப் பெத்தவங்கன்னு எல்லோரோட வயித்துலயும் வாயுலயும் அடிக்கிறது நல்லாவாஇருக்கு?
பிரச்சினை பெரிதானபிறகு குழப்புகிறார்கள். கபில் சிபல் என்னதான் கூறுகிறார் என்று ஒன்றும்புரியவில்லை.
நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரங்கள் ரத்து ஆகிவிட்டனவா இல்லையா ?
44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரங்கள் ரத்து என்கிறார் ஒரு இடத்தில்.உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்கிறார் மறு இடத்தில்.
எல்லாவற்றிலும் குழப்புவதுதான் அமைச்சரின் வேலையா?
கிடைக்கிற தகவல்களை வைத்துப்பார்த்தால், 50 லட்சம் கொடுத்தாலே போதும்… பஞ்சு மிட்டாய் வாங்கி வருகிற மாதிரி பல்கலைக்கழகத்தை வாங்கிட்டு வந்திடலாமாமே. என்னாங்கடா கொடுமை இது? எது எதுலதான் ஏவாரம் பன்னறதுன்னு விவஸ்தையே கிடையாதா?
எப்ப நம்ம ஆளுங்க கள்ளு சாராயக்கடைய அரசாங்கத்தை நடத்த விட்டுட்டு, கல்வியத் தனியார்மயம் ஆக்கினாங்களோ…. அப்பவே எல்லாம் அம்பேல் ஆயிடுச்சு.
என்னா நாடகம் நடத்துறாங்கப்பா? தாங்க முடியல சாமி. அதிகமா கட்டணம் வசூலிச்சா விடுவோமா பாருன்னு அதுக்கு ஒரு கமிட்டி. பள்ளிக்கூடத்து வேனு பள்ளத்துல கவுந்துட்டா அதுக்கு ஒரு கமிட்டி.அதுக்கு அப்புற‌மாத்தான், அய்யோ… அங்கீகாரம் இல்லாமயே அம்பது ஸ்கூலு நடந்துருக்குன்னு ரத்து பண்ணறாங்க. இதெல்லாம்கூடப் பாக்காம என்னதான் முட்டைக்கு சவரம் பண்ணிட்டு இருந்தாங்களோ இந்த் அதிகரிகளும் அமைச்சர் பெருமான்களும்?

என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல…
70 லட்சம் கொடுத்துத்தான் என்ஜினியரிங் காலேஜ் பர்மிசன் வாங்கினேன்… சும்மா ஒண்ணும் தூக்கிக்கொடுத்துடலேன்னு காலேஜ்காரங்களும்…
20 லட்சம் கொடுத்துத்தான் என்ஜினியரிங் சீட் வாங்கினேன்… சும்மா ஒண்ணும் தூக்கிக்கொடுத்துடலேன்னு மணவர்களும்….
வந்து சேரவேண்டியது ஒழுங்கா வந்து சேரலேன்னா இப்படித்தான்னு அதிகார வர்க்கமும்….. கண்னாமூச்சி ஆடுறாங்க.
இந்த்க்கூத்துல‌, பப்ளிக்கோட அண்ட்ராயர் அவுந்து போகாம இருந்தா சரி.
அதுசரி… ஒரு சின்ன சந்தேகம். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தோட வேஷ்டிய அவுத்துவுட்டுட்டீங்க சரி. அந்தப் பல்கலைகழகம் சார்பில நடிகர் விஜய், இயக்குனர்கள் சங்கர், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பிரபலங்களுக்குக் கொடுத்த டாக்டர் பட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகுமாங்க‌ அண்ணாச்சி?
*****************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s