ஆந்திர மாநிலமா? ஆத்திர மாநிலமா?….

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி சந்திரசேகரராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் தெலுங்கானாவில் போராட்டம் வெடித்தது. ஆந்திராவில் கலவரம் நீடித்ததால் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையறிந்ததும் தெலுங்கானா பகுதி மக்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தெலுங்கர்கள். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஆந்திர மாநிலம் உருவானது. இப்போது சந்திரசேகர ராவ்.
அதே சமயம் தெற்கு ஆந்திர மக்கள் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் பிரமாண்டமான நகரமாக உருவெடுத்துள்ள ஐதராபாத் எங்களுக்கே சொந்தம். அதை தெலுங்கானாகாரர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்,  பாரம்பரியம் மிகுந்த அந்த நகரத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம். தெலுங்கானாவிடம் ஒப்படைத்தால் அங்கு வசிக்கும் 70 சதவீத ஆந்திர மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விடும்” என்றனர்.
தெலுங்கானாவில் ஐதராபாத்தை சேர்க்க எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் மத்திய அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மிகவும் முக்கிய நகரம் ஐதராபாத். இதன் மூலம்தான் அதிக வருமானம் அரசுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கானாவுக்கு ஐதராபாத் கிடைக்காவிட்டால் பொருளாதார ரீதியாக அம்மாநிலம் பின்தங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத்தை கைப்பற்ற தெலுங்கானா பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.
இதே போல் ஐதராபாத் தெலுங்கானா கைவசம் போய்விட்டால் ஆந்திராவின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். மாநிலத்தின் மிக முக்கிய நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. ஆந்திர மாணவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று கலக்கம் அடைந்துள்ளனர்.
——————————————————————–
# இந்த முடிவு அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி அல்ல. வன்முறைகளை தடுக்க தெரியாத அரசாங்கத்தின் சோகமான முடிவு. மொத்த தேசத்தையும் கூறு போடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் சில விசமிகளுக்கு கிடைத்த வெற்றியாக இது மாறி விடக் கூடாது….

#அடப்பாவமே , இப்படி ஒரு பூதம் கிளம்பும்னு அந்த ராவ் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார் போல இருக்கே. அவசரப்பட்டு உண்ணாவிரத்தை கூட மனுஷன் நிறுத்திட்டாரே .. ம்ம்….ஆந்திர மாநிலம் ஆத்திர மாநிலமா மாறிடுத்து..

# அட ரொம்ப நல்ல இருக்கே நாமளும் உண்ணாவிரதம் இருந்து தென் தமிழ் நாடு , வடதமிழ் நாடுன்னு 2 மாநிலமா பிரிச்சுட்டா தெற்கு அழகிரிக்கு வடக்கு ஸ்டாலின்னுக்குன்னு பிரிச்சு கொடுத்துடலாம் குடும்பத்துல சண்டை இல்லாம இருக்கும்…..  உண்ணாவிரத நாடகத்தை சீக்கிரம் ஆரம்பிச்சுடலாம்.
——————————————————————–
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s