‘குலுக்காட்ட’ நக்மாவின் இயேசு ஊழியம்….

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்பது கிறிஸ்துவ வேதவாக்கியம்.
ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!
ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.
கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!
“ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!
எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!
அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!
திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.
உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.
இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!
நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!
இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.
நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!
அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!
நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.
எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!
எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!
“ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!
இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!
பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!
வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!
தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.
வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.
இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக

நன்றி:-

“நாத்திகம்” இதழ். ( பெரியாரின் தொண்டர் தோழர் நாத்திகம் இராமசாமி நினைவாக வந்த கட்டுரை).

காணாமல் போய்விட்ட பரபரப்பு…

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ரகுபதி, நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். தமிழக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ( மிரட்டினார் என்றும் சொல்லலாம் ), இது தொடர்பாக அவ்வமைச்சர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார். பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு லெட்டர் எழுதினார்.
யார் அந்த அமைச்சர் என்று கேள்வி எழுந்த போது ஜெயலலிதா அந்த அமைச்சர் ராசாதான் என்று அடித்து கூறினார். ஆனால் ராசா இக்குற்றச்சாட்டை மறுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் என்றால், திமுக, காங்கிரஸ் தவிர வேறு எவரும் தமிழக அரசியல் கட்சியிலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே. வாசன் நிச்சயம் செய்திருக்க மாட்டார் ஏன் என்றால் டெல்லியிலிருந்து பர்மிஷன் வாங்கி விட்டு தான் அவர் செய்ய முடியும். எஞ்சியவர்கள் பற்றி சொல்ல வேண்டாம்.
இந்த செய்தி கொஞ்ச நாள் பரபரப்பாக பேசப்பட்டது பிறகு காணாமல் போய்விட்டது. நீதிபதியும் அமைச்சர் தொடர்பு கொள்ளவில்லை, அவருடைய வழக்கறிஞர் மூலம் தொடர்பு கொண்டார் என கூறிவிட்டார். பிறகு நீதிபதிகளும் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை.
கத்தி போய் வால் வந்த கதையாக இப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, S.C.அகர்வால் என்பவர், நீதிபதியை மிரட்டியது யார் என்பதனை தெரியப்படுத்த வேண்டுமென மனு செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய தகவல் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தகவல் கோரியுள்ளது. அதாவது அந்த மத்திய அமைச்சரின் பெயரும், அவருக்காக நீதிபதியைத் தொடர்பு கொண்ட அவரது வழக்கறிஞர் பெயரையும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமாம்.
அதில் அகர்வால் தனது மனுவில் முதலில் வந்த மீடியா தகவல்களின் படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணுக்கு நீதிபதி ரகுபதி அமைச்சரே தன்னிடம் நேரடியாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அகர்வாலின் இந்த மனுவை மத்திய தகவல் வாரியம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

மன்மோகன் சிங் + சோனியா =தேசிய நெடுஞ்சாலை….

பாரத மக்களுக்கு காங்கிரஸ் தலைவி சோனியாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் தெருவுக்குத் தெரு, முச்சந்திக்கு முச்சந்தி என திரும்பியவிடமெல்லாம் தரிசிக்கும் பாக்யம் கிட்டப் போகிறது. ஆம்!!  தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு சாலைகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை (??) காண்பித்துள்ளதாம். அதனை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு பதாகை, அதுவும் எவ்வாறு?? காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா மற்றும் மன்மோகன் ஆகியோர்களின் புகைப்படங்களைத் தாங்கிய பதாகை!! இது ஏற்கனவே பாஜக அரசால் செயற்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டம். அதனை சற்றே பெயர் மாற்றி “National Highways Developement Programme (NHDP) என்று செயல்படுத்தி வருகிறது.
இதில் விஷயம் என்னவெனில், இந்த ஒரு பதாகைக்கு ஆகக் கூடிய செலவு சுமார் 4 லட்சம் என கணக்கிடப்படுகிறது. சுமார் ஆயிரம் கிலோமீட்டர்களுள்ள நெடுஞ்சாலையில், 25 கி.மீக்கு ஒன்றாக வைத்துக் கொண்டாலும் சுமார் 40 பதாகைகள் சுமார் 1.6 கோடி ஆகிறது. இதனை தயாரிக்கும் செலவு அதனை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர்களைச் (நெடுஞ்சாலைத் துறை) சேர்ந்தது. இதனை பராமரிக்கும் செலவு தனியாரிடம் விடப்படப் போகிறது. இந்த பதாகைகளில் இவ்விருவரின் புகைப்படம் தவிர, திட்ட இயக்குனர், மேற்பார்வையாளர், திட்ட மதிப்பீடு போன்றவை பற்றிய விவரங்களும் கொசுறாக இடம்பெறும். தவிர இந்த பதாகைகள் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் தயாரிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. புகைப்படங்கள் தெளிவாக தெரிய வேண்டுமென்பதற்காக சிறப்பான முறையில் அதிக பொருட்செலவோடு தயாராகிறது. 1000 கிலோ மீட்டர்களுக்கே இவ்வளவென்றால், நாடு முழுவதுமுள்ள 70000 கி.மீ சாலைகளுக்கு எவ்வளவு செலவாகுமென்பதை தோராயமாக நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதிமுறைகளின் படி, சாலையோரங்களில் விளம்பரங்கள் வைக்கப்படக் கூடாது. இவ்விதமான பதாகைகள் உங்களது விதிமுறைகளையே மீறுவதாகாதா என கேட்டதற்கு, சாலையின் பயனாளர்கள் அரசின் இத்திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டே இவை அமைக்கப்படுகின்றனவே தவிர இது விதிமுறை மீறலாகாது என பதிலளிக்கப்பட்டுள்ளது. திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்களின் புகைப்படம் எதற்கு?? ரோடு போட்ட பணியாளர்கள் புகைப்படத்தைப் போடலாமே?? எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருபுறம் இந்தியா முழுவதிலும் விவசாயிகள் பட்டினிச் சாவால் இறந்து கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். மறுபுறம் நக்ஸல்கள் மற்றும் ஜிஹாதி தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் ஜகஜ்ஜோதியாக நடைபெறுகின்றன. மறுபுறம் சீனா நம்மிடத்தை ஆக்கிரமிக்கிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண அரசிற்கு துப்பில்லை. இந்நிலையில் இது போன்ற ஆடம்பர விளம்பரங்கள் தேவையா?? இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த போது மக்களின் வரிப்பணம் தண்ணீராய் செலவிடப்படுகிறது என்று கவலைப்பட்ட காங்கிரஸ் இப்போது இதுபோன்ற உதவாத வேலைகளில் முனைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தனக்குத்தானே சிலை நிறுவிக் கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், தற்போது அதே போன்ற வேலையில் ஈடுபட முனைகிறது.
நாங்கள் சாலை போட்டோம், நாங்கள் குளம் வெட்டினோம் என்று பீற்றிக் கொள்ள இதில் எதுவுமே இல்லை. இவைகளை செய்வதர்க்குத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்