உதயசூரியன்


நான்….. பெ.உதயசூரியன்.

திமிர்நிறைந்து கிடக்கும் தென்னிலை மண்ணிலிருந்து

வித்தாகி வெளிவந்து‍‍‍…தற்பொழுது‍ மாதத்தில் பாதிநாட்கள்

சென்னைப் பட்டிணத்தின் சில்லென்ற கடற்க் காற்றை

சுவாசித்துக் கொண்டிருப்பவன்!


ஏழாவது படிக்கும்போதே கதைகவிதை எழுதுதற்கும்

எட்டாவதை எட்டும்போதே மேடையிலே ஏறுதற்கும்

பக்குவப் படுத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டவன்.


படித்தது என்னமோ சட்டமாக இருந்தாலும்

பிடித்தது என்னமோ அரசியல் ஆனதால்

பதவிகள் பலவும் பழகிப் போயின‌

பாதைகள் யாவையும் அனுபவம் ஆகின.


நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கப்போய்

நிறையத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன்.

விழுமென நினைத்த விசயங்கள் பலதில்

விண்முட்டப் பறந்து ஜெயித்துமிருக்கிறேன்.


அரசியல் சினிமா அனைத்திலும் உறவு

பத்திரிகைப் பணீயிலும் பறக்குமென் சிறகு.

************************************
இங்கு பதிவு செய்யப்படும் எழுத்துக்களில்
தோழமை உற‌வுகளின் பங்கும் உண்டு.

எனவே… ஏதேனும் குறைகளோ, வேறெவரின் சாயலோ
தென்பட்டால் தெரியப்படுத்துங்கள். திருத்திக்கொள்கிறோம்!
நிறையத் திட்டுவதாக இருந்தாலும்…
கொஞ்சமாகக் கொஞ்சுவதாக இருந்தாலும்…
இருக்கவே இருக்கிறது ஈமெயில் முகவரி…

pusuriyan@gmail.com
Advertisements

4 comments on “உதயசூரியன்

  1. உங்கள் எழுத்துக்கள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..

  2. அருமையான வரிகள்…. இருளை நீக்கும் ஆதவனை போல்… அறியாமையை நீக்கும் உதய சூரியனாய்…. உங்களது சேவையும்… எழுத்தும் தொடர எனது உளம் கனிந்த நல வாழ்த்துக்கள் நண்பரே……….

  3. உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s